விஷால் சிக்காவுக்கு ரூ.13 கோடி ‘இன்போசிஸ்’ நிறுவனம் அளித்தது

தினமலர்  தினமலர்
விஷால் சிக்காவுக்கு ரூ.13 கோடி ‘இன்போசிஸ்’ நிறுவனம் அளித்தது

புதுடில்லி : இன்­போ­சிஸ் நிறு­வ­னம், அதன் முன்­னாள் தலைமை செயல் அதி­காரி விஷால் சிக்­கா­வுக்கு, 2017 – 18ம் நிதி­யாண்­டிற்­கான ஊக்க ஊதி­ய­மாக, 12.92 கோடி ரூபாய் வழங்­கி­யுள்­ளது. இது, முந்­தைய, 2016 – -17ம் நிதி­யாண்­டில், 16.01 கோடி ரூபா­யாக இருந்­தது.

இன்­போ­சிஸ் நிறு­வ­னர்­க­ளு­டன் ஏற்­பட்ட கருத்து மோதல் கார­ண­மாக, விஷால் சிக்கா, 2017 ஆகஸ்­டில், பதவி வில­கி­னார். இதை­ய­டுத்து, தற்­கா­லி­க­மாக தலைமை செயல்­பாட்டு அதி­கா­ரி­யாக பொறுப்­பேற்ற, பிர­வின் ராவுக்­கான ஊக்க ஊதி­யம், 7.80 கோடி­யில் இருந்து, 8.22 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.

இந்­தாண்டு ஜன­வ­ரி­யில் இன்­போ­சிஸ் தலைமை செயல் அதி­கா­ரி­யாக, சலில் பரேக் பொறுப்­பேற்­றார். அவ­ருக்கு, கடந்த நிதி­யாண்­டில், ஜன., – மார்ச் வரை­யி­லான காலத்­திற்கு, 3.98 கோடி ரூபாய் ஊக்க ஊதி­யம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

சமீ­பத்­தில் இன்­போ­சிஸ் இயக்­கு­னர் குழு­வில் இருந்து வெளி­யே­றிய ரவி வெங்­க­டே­சன், 1.43 கோடி ரூபாய் ஊக்க ஊதி­யம் பெற்­றுள்­ளார். விஷால் சிக்­காவை தொடர்ந்து, செயல்­சாரா இயக்­கு­ன­ராக பொறுப்­பேற்ற, இன்­போ­சிஸ் நிறு­வ­ன­ருள் ஒரு­வ­ரான, நந்­தன் நிலே­கனி, ஊக்க ஊதி­யம் பெற மறுத்­து­விட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

மூலக்கதை