ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிகர இழப்பு ரூ.7,718 கோடி

தினமலர்  தினமலர்
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நிகர இழப்பு ரூ.7,718 கோடி

புதுடில்லி : பொதுத் துறை­யைச் சேர்ந்த, ஸ்டேட் பேங்க் ஆப் இந்­தியா, 2017 –-18ம் நிதி­யாண்­டின், ஜனவரி – மார்ச் வரை­யி­லான நான்­கா­வது காலாண்­டில், 7,718 கோடி ரூபாய் நிகர இழப்பை சந்­தித்­து உள்­ளது. முந்­தைய, அக்டோபர் – டிசம்­பர் காலாண்­டில், இழப்பு, 2,416 கோடி ரூபா­யாக இருந்­தது.

முந்­தைய, 2016 – -17ம் நிதி­யாண்­டின், நான்­கா­வது காலாண்­டில், இவ்­வங்கி, 2,815 கோடி ரூபாய் நிகர இழப்பை கண்­டு­இருந்­தது. அதே­ச­ம­யம், இதே காலத்­து­டன் ஒப்­பி­டும் போது, மதிப்­பீட்டு காலாண்­டில், இவ்­வங்­கி­யின் வரு­வாய், 57,720 கோடி­யில் இருந்து, 68,436 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­து உள்­ளது.

வங்­கி­யின் மொத்த வாராக் கடன், 6.90 சத­வீ­தத்­தில் இருந்து, 10.91 சத­வீ­த­மாக ஏற்­றம் கண்­டு உள்­ளது. நிகர வாராக் கடன், 3.71 சத­வீ­தத்­தில் இருந்து, 5.73 சத­வீ­த­மாக உயர்ந்­து உள்­ளது. நிகர வாராக் கட­னுக்­கான ஒதுக்­கீடு அதி­க­ரிக்­கப்­பட்­ட­தால், வங்­கி­யின் இழப்பு அதி­க­ரித்­து உள்­ளது. நேற்று, மும்பை பங்­குச்சந்­தை­யில், இவ்­வங்கி பங்­கின் விலை, 3.69 சத­வீ­தம் அதி­க­ரித்து, 254.15 ரூபா­யில் முடி­வ­டைந்­தது.

மூலக்கதை