ஐரோப்பாவில் கால்பதிக்கிறது, ‘ஆர்ஜியோ’; குட்டி நாட்டில் இருந்து கோலோச்ச திட்டம்

தினமலர்  தினமலர்
ஐரோப்பாவில் கால்பதிக்கிறது, ‘ஆர்ஜியோ’; குட்டி நாட்டில் இருந்து கோலோச்ச திட்டம்

புதுடில்லி : ஆயுள் முழு­வ­தும் இல­வச அழைப்­பு­கள்; அதி­ரடி கட்­ட­ணக் குறைப்பு; திரும்ப பணம் பெறும், ‘பியூச்­சர் போன்’ போன்ற அதி­ரடி திட்­டங்­க­ளால், கலக்கி வரும், ‘ஆர்­ஜியோ’ நிறு­வ­னம், ஐரோப்­பிய சந்­தை­யி­லும் கால்பதிக்க உள்­ளது.

எஸ்­தோ­னியா என்ற குட்டி நாட்­டில் இருந்து, ஐரோப்­பிய நாடு­களில், தொலை­தொ­டர்பு சேவையை வழங்க முடிவு செய்­துள்­ளது. ஆர்­ஜியோ, எஸ்­தோ­னி­யாவை தேர்ந்­தெ­டுக்க முக்­கிய கார­ணம், அதன் புது­மை­யான, ‘டிஜிட்­டல்’ கொள்­கை­கள் தான். இந்­நாடு, தொழில் துவங்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு, ‘இ – ரெசி­டன்சி’ என்ற திட்­டத்­தில், பிரத்­யே­க­மாக, ‘டிஜிட்­டல் அடை­யாள எண்’ வழங்­கு­கிறது.

இதன் மூலம், ஒரு நிறு­வ­னம், உல­கின் எந்த மூலை­யில் இருந்­தா­லும், எஸ்­தோ­னியா மூலம், ஐரோப்­பிய கூட்­ட­மைப்பு நாடு­களில், குறைந்த செல­வில், வர்த்­த­கம் புரி­ய­லாம். சுருக்­க­மாக சொன்­னால், இந்­தி­யா­வில் ஒரு நிறு­வ­னம் தயா­ரிக்­கும் பொருள் அல்­லது வழங்­கும் சேவையை, எஸ்­தோ­னியா மூலம், ஐரோப்பா முழு­வ­தற்­கும் அளிக்­க­லாம்.

இங்கு, வர்த்­தக நடை­மு­றை­கள், பணப் பரி­வர்த்­த­னை­கள், வரி கணக்கு தாக்­கல், ஆவ­ணங்­களில், ‘டிஜிட்­டல்’ கையொப்ப வசதி உள்­ளிட்ட அனைத்து செயல்­பா­டு­களும், மின்­னணு தொழில்­நுட்­பத்­தில் நடை­பெ­று­கின்­றன. அத­னால், எந்த நாட்­டில் இருந்­தும், எஸ்­தோ­னியா மூலம், குறைந்த செல­வில் வர்த்­த­கம் புரி­வது சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது.

இதற்­காக, பிரத்­யேக கணினி ஒருங்­கி­ணைப்பு சேவை, தக­வல் பாது­காப்பு உள்­ளிட்ட வச­தி­களை, எஸ்­தோ­னியா ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இதன் கார­ண­மாக, இந்­நாட்­டில் மிகச் சுல­ப­மா­க­வும், விரை­வா­க­வும் தொழில் துவங்க முடி­கிறது. இத்­த­கைய வச­தி­களை பயன்­ப­டுத்தி, தன் தொலை­தொ­டர்பு சேவையை, இந்­தி­யா­விற்கு வெளியே கொண்டு செல்ல, ஆர்­ஜியோ முடிவு செய்­துள்­ளது.

இது குறித்து ரிலை­யன்ஸ் குழும அதி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: மார்ச் மாதம், இந்­தியா வந்த எஸ்­தோ­னிய அரசு பிர­தி­நி­தி­கள், ரிலை­யன்ஸ் குழும தலை­வர் முகேஷ் அம்­பா­னியை சந்­தித்து பேசி­னர். இதை­ய­டுத்து, எஸ்­தோ­னிய வர்த்­தக பிரிவை துவக்க, முதற்­கட்­ட­மாக, 12.20 கோடி ரூபாய் ஒதுக்க உள்­ளோம்.

இந்த திட்­டம் மூலம், உள்­நாட்­டின் கடு­மை­யான போட்டி, குறை­வான லாப வரம்பு போன்­ற­வற்­றால் ஏற்­படும் இடர்ப்­பா­டு­களை, ஆர்­ஜி­யோ­வால் சமா­ளிக்க முடி­யும். அனைத்து அடிப்­படை கட்­ட­மைப்பு வச­தி­களும், நிறு­வ­னத்­தி­டம் உள்­ள­தால், இந்­தி­யா­வில் இருந்­த­படி, ஐரோப்­பா­வில் சேவையை விரி­வு­ப­டுத்த முடி­யும். இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.

வேகமான வளர்ச்சி :
வடக்கு ஐரோப்­பா­வில் உள்ள சிறிய நாடு, எஸ்­தோ­னியா. மக்­கள் தொகை, 13 லட்­சம். 1991ல் சுதந்­திர நாடாக மறு­பி­ர­க­ட­னம் செய்­யப்­பட்­டது. அது முதல், தக­வல் தொழில்­நுட்­பத் துறைக்கு அதிக முக்­கி­யத்­து­வம் அளித்­தது. அத­னால், ‘டிஜிட்­டல்’ தொழில்­நுட்­பத்­தில் மிக­வும் முன்­னே­றிய நாடு­களில் ஒன்­றாக உரு­வெ­டுத்­துள்­ளது. வலை­த­ளம் மூலம், 2005ல் பொது தேர்­தல் நடத்­திய முதல் நாடு; முதன் முறை­யாக, 2014ல், ‘இ – ரெசி­டன்சி’ திட்­டத்தை அறி­மு­கப்­ப­டுத்­திய நாடு என்ற சிறப்­பும், எஸ்­தோ­னி­யா­வுக்கு உள்­ளது. இங்கு, அரசு சேவை­களில், 99 சத­வீ­தத்தை, வலை­த­ளம் மூலம் பெறும் வசதி உள்­ளது.

மூலக்கதை