அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்

தினமலர்  தினமலர்
அரசு வீட்டை காலி செய்ய மறுப்பு: 2 வருடம் அவகாசம் கேட்கிறார் அகிலேஷ்

லக்னோ: கடந்த சமாஜ்வாடி ஆட்சியில் உத்தரப்பிரதேச மாநில மாஜி முதல்வர்களுக்கு நிரந்தர குடியிருப்பு, அரசு சம்பளத்தில் உதவியாளர்கள், தொலைபேசி இணைப்பு உள்ளிட்ட சகல வசதிகளை அளிக்கும் மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. இதனை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனு விசாரித்த நீதிபதிகள், “ மாஜி முதல்வர்கள் அரசு பங்களா உள்ளிட்ட வசதிகளை அனுபவிக்க உரிமை கிடையாது சலுகைகள் வழங்கும் போது, நிரந்தர குடியிருப்பு வழங்குவது தவறானது” என அந்த சட்டத்தை ரத்து செய்தனர்.
இதையடுத்து 15 நாட்களில் வீடுகளை காலி செய்ய வேண்டும் மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது. மாயாவதி வீட்டை காலி செய்துவிட்டு சொகுசு பங்களாவில் குடியேறிார். இந்நிலையில் மற்றொரு மாஜி முதல்வர் அகிலேஷ் தாம் இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் உள்ளதால், தனது வீட்டை காலி செய்ய 2 ஆண்டுகள் கால அவகாசம் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை