பீன்ஸ் விலை ஏற்றம்

தினமலர்  தினமலர்

சென்னை : கோயம்­பேடு காய்­கறி சந்­தை­யில் பீன்ஸ் விலை அதி­க­ரித்­துள்­ளது.

கோயம்­பேடு காய்­கறி சந்­தை­யில், 25 ரூபாய்க்கு விற்று வந்த பீன்ஸ் 1 கிலோ, 55 – 65 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. உரு­ளைக்­கி­ழங்கு, கோவக்­காய், நுால்கோல், உள்­ளிட்­டவை ஒரு கிலோ, 20 – 25 ரூபாய்க்­கும், கேரட் 1 கிலோ, 25 – 30 ரூபாய்க்­கும், வெண்­டைக்­காய், 15 ரூபாய்க்­கும் விற்­ப­னை­யா­கின.

நாட்டு அவ­ரைக்­காய், 30 – 40 ரூபா­யாக இருந்­தது. தக்­காளி, 10 ரூபாய்க்­கும், வெங்­கா­யம், 12 – 15 ரூபாய்க்­கும் விற்­ப­னை­யா­கின. பீட்­ரூட், கத்­திரி, கோஸ், புட­லங்­காய், உள்­ளிட்­டவை, 10 – 15 ரூபாய்க்கு விற்­கப்­பட்­டன. வாழைக்­காய் வரத்து அதி­க­ரித்து, ஒரு வாழைக்­காய், 3 – 5 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. சவ்­சவ், கொத்­த­வ­ரங்­காய் உள்­ளிட்­டவை, 40 – 45 ரூபாய்க்கு விற்­கப்­பட்­டது. அதி­க­பட்­ச­மாக இஞ்சி, 1 கிலோ, 100 – 110 வரை விற்­கப்­பட்­டது.

மூலக்கதை