தமிழகம், கேரளாவில் 400 காசுகளாக முட்டை விலை நிர்ணயம்

தினமலர்  தினமலர்
தமிழகம், கேரளாவில் 400 காசுகளாக முட்டை விலை நிர்ணயம்

நாமக்­கல் : தமி­ழ­கம் மற்­றும் கேர­ளா­வில், முட்டை கொள்­மு­தல் விலை, 400 காசு­க­ளாக நிர்­ண­யம் செய்­யப்­பட்­டுள்­ளது.

நாமக்­கல்­லில் தேசிய முட்டை ஒருங்­கி­ணைப்­புக் குழு கூட்­டம் நேற்று நடந்­தது. அதில், முட்டை உற்­பத்தி, மார்க்­கெட்­டிங் நில­வ­ரம் குறித்து, பண்­ணை­யா­ளர்­கள் விவா­தித்­த­னர். அதை­ய­டுத்து, 395 காசு­க­ளுக்கு விற்­பனை செய்­யப்­பட்ட முட்டை விலை, 5 காசு உயர்த்தி, 400 காசு­க­ளாக நிர்­ண­யம் செய்­யப்­பட்­டது.

நாட்­டின் பிற மண்­ட­லங்­களில் முட்டை விலை (காசு­களில்) நில­வ­ரம்: சென்னை, 410, ஐத­ரா­பாத், 341, விஜ­ய­வாடா, 347, பர்­வாலா, 338, மும்பை, 390, மைசூரு, 393, பெங்­க­ளூரு, 385, கோல்­கட்டா, 405, டில்லி, 352 என, நிர்­ண­யம் செய்­யப்­பட்­டுள்­ளது.

நாமக்­கல்­லில் நேற்று நடந்த பண்­ணை­யா­ளர், வியா­பா­ரி­கள் ஒருங்­கி­ணைப்­புக் குழு கூட்­டத்­தில், 1 கிலோ, 73 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்டு வந்த முட்­டைக்­கோழி விலையை, 5 ரூபாய் உயர்த்தி, 78 ரூபாய் என, விலை நிர்­ண­யம் செய்­யப்­பட்­டது.

பல்­ல­டத்­தில் நடந்த உற்­பத்­தி­யா­ளர் ஒருங்­கி­ணைப்­புக் குழு கூட்­டத்­தில், 1 கிலோ, 106 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்டு வந்த கறிக்­கோழி விலை, எவ்­வித மாற்­ற­மும் செய்­யா­மல், அதே விலை நிர்­ண­யம் செய்­யப்­பட்­டது.

மூலக்கதை