பி.எஸ்.என்.எல்.,லின் வருவாய் 81 சதவீதம் டேட்டாவால் கிடைக்கும்

தினமலர்  தினமலர்
பி.எஸ்.என்.எல்.,லின் வருவாய் 81 சதவீதம் டேட்டாவால் கிடைக்கும்

‘வரும், 2022ம் ஆண்­டில், பி.எஸ்.என்.எல்., நிறு­வ­னத்­தின் மொத்த வரு­வா­யில், 81 சத­வீ­தம், மொபைல் டேட்டா மூலம் கிடைக்­கும்’ என, அதி­கா­ரி­கள் தெரி­வித்­து உள்­ள­னர்.

நாடு முழு­வ­தும் உள்ள, 27 பி.எஸ்.என்.எல்., மண்­டல அதி­கா­ரி­கள் கூட்­டம் டில்­லி­யில் நடந்­தது. இந்­தக் கூட்­டத்­தில், மத்­திய தொலை தொடர்பு அமைச்­சர் மனோஜ் சின்ஹா, செய­லர் அருணா சுந்­தர்­ரா­ஜன் உட்­பட பலர் பங்­கேற்­ற­னர்.

இது குறித்து, பி.எஸ்.என்.எல்., அதி­கா­ரி­கள் கூறி­ய­தா­வது: மண்­டல அதி­கா­ரி­க­ளு­டன் நடந்த கூட்­டத்­தில், பி.எஸ்.என்.எல்., வளர்ச்சி குறித்­தும், அதன் தேவை­கள் குறித்­தும் ஆலோ­சிக்­கப்­பட்­டது. இந்த ஆண்டு, பி.எஸ்.என்.எல்., நிறு­வ­னத்­தின் வளர்ச்­சிக்கு தேவை­யான பல்­வேறு சிறப்பு திட்­டங்­கள் குறித்து, உயர் அதி­கா­ரி­கள் பேசி­னர்.

சர்­வ­தேச மொபைல் டேட்டா மற்­றும் ‘வைபை’ திட்­டங்­களை ஊக்­கப்­ப­டுத்த வேண்­டும். வரும் காலங்­களில், வீடு தோறும், ‘பிராட்­பேண்டு’ சேவை கட்­டா­யம் இடம்­பெ­றும். இத­னால், 2022ம் ஆண்­டில், பி.எஸ்.என்.எல்.,லின் மொத்த வரு­வா­யில், 81 சத­வீ­தம் மொபைல் டேட்டா மூலம் கிடைக்­கும். தனி­யார் நிறு­வ­னங்­க­ளுக்கு இணை­யாக போட்­டி­யி­டும் அள­வுக்கு மார்­கெட்­டிங் துறை­யி­னர் செயல்­பட வேண்­டும். இவ்­வாறு அவர்­கள் கூறி­னர்.

மூலக்கதை