கைமாறியது பூஷன் ஸ்டீல்; குறைந்தது வாராக்கடன்

தினமலர்  தினமலர்
கைமாறியது பூஷன் ஸ்டீல்; குறைந்தது வாராக்கடன்

புது­டில்லி : ‘பூஷன் ஸ்டீல்’ நிறு­வ­னம் கைமா­றி­ய­தால், பொதுத் துறை வங்­கி­க­ளின் வாராக்­க­டன் சுமை­யில், 35 ஆயி­ரம் கோடி ரூபாய் குறைந்­துள்­ளது.

வாராக்­க­டன் தொடர்­பாக, பூஷன் ஸ்டீல் உள்­ளிட்ட, 12 நிறு­வ­னங்­கள் மீது, ரிசர்வ் வங்கி பரிந்­து­ரை­யின் பேரில், திவால் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பான ஏலத்­தில், ‘டாடா ஸ்டீல்’ நிறு­வ­னத்­தின் துணை நிறு­வ­ன­மான, பாம்­னி­பால் ஸ்டீல், பூஷன் ஸ்டீல் நிறு­வ­னத்­தின், 72.65 சத­வீத பங்­கு­களை, 36 ஆயி­ரத்து, 400 கோடி ரூபாய்க்கு கைய­கப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இது குறித்து, மத்­திய நிதிச் சேவை­கள் துறை செய­லர், ராஜிவ் குமார் கூறி­ய­தா­வது: பூஷன் ஸ்டீல் நிறு­வ­னம் கைமா­றி­யுள்­ள­தால், பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு, வாராக்­க­டன் பட்­டி­ய­லில் இருந்த, 3௫ ஆயி­ரம் கோடி ரூபாய் திரும்­பக் கிடைத்­துள்­ளது. இதன் மூலம், பொதுத் துறை வங்­கி­க­ளின் கடன் சுமை குறைந்­துள்­ளது. அந்­நி­று­வ­னத்­திற்கு கடன் வழங்­கிய ஒவ்­வொரு வங்­கிக்­கும், குறைந்­த­பட்­சம், 500 கோடி முதல், 10 ஆயி­ரம் கோடி ரூபாய் வரை கிடைக்­கும்.

மத்­திய அர­சின் திவால் சட்­டத்­தின் மூலம், இது சாத்­தி­ய­மா­கி­யுள்­ளது. வெளிப்­ப­டை­யான கடன் கலா­சா­ரத்­திற்கு, வங்­கித் துறை மாறி வரு­வ­தன் துவக்­கம் இது என­லாம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

மூலக்கதை