வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்காத வங்கிகள்

தினமலர்  தினமலர்
வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்காத வங்கிகள்

மும்பை : கடன் பெறு­வ­தற்கு தகு­தி­யான, நம்­ப­க­மான வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு கடன் தரு­வ­தில், வங்­கி­களும், நிதி நிறு­வ­னங்­களும் மிக­வும் பின்­தங்­கி­யுள்­ளது, ஆய்­வொன்­றில் தெரி­ய­வந்­துள்­ளது.

இது குறித்து, ‘டிரான்ஸ்­யூ­னி­யன் சிபில்’ நிறு­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை: கடந்த, 10 ஆண்­டு­களில், வங்கி அல்­லது நிதி நிறு­வ­னத்­தில் கணக்கு வைத்­துள்ள, தகு­தி­யுள்ள, 22 கோடி பேரில், 7.20 கோடி பேருக்­குத் தான், சில்­லரை கடன் வழங்­கப்­பட்­டுள்­ளது. எஞ்­சி­யோ­ரில் பலர், வயது, வரு­வாய், கடன் வர­லாறு போன்­ற­வற்­றில், விதி­மு­றை­க­ளின்­படி தகுதி பெற்­றி­ருந்த போதி­லும், அவர்­க­ளுக்கு கடன் வசதி அளிக்­கப்­ப­டா­மல் இருப்­பது, ஆய்­வில் தெரி­ய­வந்­துள்­ளது.

அத­னால், எஞ்­சி­யோ­ருக்கு, அடுத்த ஐந்து ஆண்­டு­கள் மற்­றும் அதற்கு மேற்­பட்ட காலத்­தில், கடன் வழங்­கு­வ­தற்­கான வாய்ப்­பு­கள் நன்கு உள்­ளன. அதை, வங்­கி­களும், நிதி நிறு­வ­னங்­களும் பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். குறிப்­பாக, கிரெ­டிட் கார்டு, தனி­ந­பர் கடன், நுகர்­வோர் சாத­னங்­கள் கடன் உள்­ளிட்ட சில்­லரை கடன்­களில், அளப்­ப­ரிய வர்த்­தக வாய்ப்­பு­கள் உள்­ளன. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

மூலக்கதை