எரிபொருளுக்கு கலால் வரியை குறைக்க வேண்டும்; மத்திய அரசுக்கு தொழில் கூட்டமைப்புகள் கோரிக்கை

தினமலர்  தினமலர்
எரிபொருளுக்கு கலால் வரியை குறைக்க வேண்டும்; மத்திய அரசுக்கு தொழில் கூட்டமைப்புகள் கோரிக்கை

புதுடில்லி : ‘எரி­பொ­ரு­ளுக்­கான கலால் வரியை குறைத்­தால், பெட்­ரோல், டீசல் ஆகி­ய­வற்­றின் விலை, கட்­டுக்­குள் வரும்’ என, தொழில் கூட்­ட­மைப்­பு­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ளன.

இது குறித்து, இந்­திய வர்த்­த­கம் மற்­றும் தொழில் கூட்­ட­மைப்­பின் தலை­வர், ராஷேஷ் ஷா கூறி­ய­தா­வது: கச்சா எண்­ணெய் விலை உயர்­வால், நாட்­டின் பண­வீக்­கம் அதி­க­ரிக்­கும். இந்­தியா, அதிக அள­வில் கச்சா எண்­ணெய் இறக்­கு­மதி செய்­வ­தால், இறக்­கு­மதி செல­வி­னம் உய­ரும். இத­னால், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை உயர்ந்து, ரூபாய் மதிப்பு மேலும் சரி­யும் அபா­யம் உள்­ளது.

தொடர் தாக்­கங்­க­ளால், ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்­கை­யில், வட்டி விகி­தத்தை உயர்த்­தும். இது, தற்­போ­தைய தனி­யார் முத­லீ­டு­க­ளின் வளர்ச்­சியை பாதிக்­கும். நாட்­டின் பொரு­ளா­தா­ரம், மந்­த­நி­லை­யில் இருந்து, வளர்ச்­சிப் பாதைக்கு திரும்பி வரு­கிறது. இந்த சூழ­லில், கச்சா எண்­ணெய் விலை உயர்வு, அதிக இடர்ப்­பாட்டை ஏற்­ப­டுத்­தும்.

இப்­பி­ரச்­னைக்கு உட­னடி தீர்வு காணா­வி­டில், பொரு­ளா­தார வளர்ச்சி தடை­படும். மத்­திய அரசு, உட­ன­டி­யாக பெட்­ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்­டும். இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.

ஒருங்­கி­ணைந்த வர்த்­த­கம் மற்­றும் தொழி­லக அமைப்­பான, ‘அசோ­செம்’ தலை­வர், டி.எஸ்.ராவத் கூறி­ய­தா­வது: இந்­திய பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு மிகப் பெரிய அச்­சு­றுத்­த­லாக, கச்சா எண்­ணெய் விலை உயர்­வும், ரூபாய் மதிப்பு சரி­வும் உள்­ளன. எரி­பொ­ருட்­க­ளுக்­கான கலால் வரியை உடனே குறைக்க வேண்­டும். அவ்­வாறு குறைத்­தா­லும், அது, நுகர்­வோ­ருக்கு, தற்­கா­லிக தீர்­வா­கத்­தான் இருக்­குமே தவிர, நிரந்­தர தீர்­வாக அமை­யாது.

மத்­திய, மாநில அர­சு­கள் கலந்­தா­லோ­சித்து, பெட்­ரோல், டீசலை மீதான, ஜி.எஸ்.டி.,யில் கொண்டு வருவது தான், நிரந்­தர தீர்­வாக இருக்­கும். மேலும், பெட்­ரோல், டீசல் மீதான கலால் வரி, ஜி.எஸ்.டி., ஆகி­யவை வாயி­லாக கிடைக்­கும் பெரு­ம­ளவு வரு­வாயை மட்­டுமே, இந்­தியா நம்­பி­யி­ருக்க கூடாது. நீண்ட கால அடிப்­ப­டை­யில், எரி­பொ­ருள் பாது­காப்பு தீர்­வு­க­ளை­யும் ஆலோ­சிக்க வேண்­டிய தரு­ணம் இது. வாகன எரி­பொ­ருள், நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு உந்­து­சக்­தி­யாக இருக்க, உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்­டும். இவ்­வாறு அவர் தெரி­வித்­துள்­ளார்.

மத்­திய அரசு, 1 லிட்­டர் பெட்­ரோ­லுக்கு, 19.58 ரூபாய்; டீச­லுக்கு, 15.33 ரூபாய் கலால் வரி விதிக்­கிறது. இது தவிர, மாநி­லங்­கள், ‘வாட்’ வரி­யும் வசூ­லிக்­கின்­றன.

கொஞ்சம் பொறுங்கள்:
கடந்த, 2017 – 18ம் நிதி­யாண்­டில், 7,200 கோடி டாலர் மதிப்­பிற்கு, கச்சா எண்­ணெய் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டது. தற்­போது, 1 பேரல் கச்சா எண்­ணெய் விலை, 80 டால­ராக உயர்ந்­துள்­ளது. இத­னால், நடப்பு நிதி­யாண்­டில், கச்சா எண்­ணெய் இறக்­கு­மதி செல­வி­னம், 2,500 – 5,000 கோடி டாலர் வரை அதி­க­ரிக்­கும். பெட்­ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்­பது குறித்து, ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­கிறது. கொஞ்­சம் பொறுத்­தி­ருங்­கள்
-சுபாஷ் சந்திர கார்க், செயலர், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை

மூலக்கதை