கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் சன்ரைசர்ஸ் - சிஎஸ்கே இறுதி போட்டிக்கு செல்வது யார்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் சன்ரைசர்ஸ்  சிஎஸ்கே இறுதி போட்டிக்கு செல்வது யார்?

மும்பை : மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல்  இடத்தில் உள்ள ஐதராபாத் சன் ரைசர்ஸ்சும், சென்னை சூப்பர் கிங்ஸ்சும் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்  என்பதால் இந்த போட்டி மிகக்  கடுமையானதாக  இருக்கும்.

இந்தப் போட்டியில் இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் 9 வெற்றி, 5 தோல்வி, என 18  புள்ளிகளுடன் சம பலத்தில்  இருப்பதால் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் நேரடியாக இறுதிச்சுற்றுக்கு செல்வர் என்பதால் இந்த வெற்றியை  தக்க வைக்க இரு அணிகளும் கடுமையாக மோத காத்திருக்கிறது.

வில்லியம்சன்  தலைமையிலான அணியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியில் ஷிகர் தவான்,  அலெக்ஸ் ஹேல்ஸ்,  ஷகிப் அல் ஹசன்,  ஆகியோர் மிகச் சிறந்த பேட்ஸ் மேனாக  இருந்து வருகிறார்கள். இவர்களை அடுத்து இறங்கும்  விருதிமன் சாஹா  மனிஷ் பாண்டே, , யூசுப் பதான்,  முகமது நபி, ரஷீத் கான், ஆகியோர் மிகச் சிறந்த ஆட்டத்தை கொடுக்கவேண்டிய  சூழலில் இருக்கிறார்கள்.

அதே வேளையில்  பசில் தம்பி,   சித்தார்த் கவுல், சந்தீப் சர்மா, புவனேஸ்வர் குமார், கிறிஸ் ஜோர்டான்,  ஆகியோர் பந்து வீச்சில் மிகச் சிறந்த பந்து வீச்சினை  கொடுக்க வேண்டிய  கட்டாயத்தில் இருக்கிறார்கள்.   இந்த அணியின் பலமே அதிரடி ஆட்டம், அசத்தலான பந்து வீச்சு என ஆல்ரவுண்டராக கலக்கும் வீரர்கள்   இருப்பதுதான். இந்த பலம்தான் இதுவரை இவர்களுக்கு பலன் கொடுத்து வந்தது.

நாளைய ஆட்டத்தில்  ஆல்ரவுண்டர் ஆக் ஷன் மீண்டும் கை   கொடுக்குமா என்று நாளை இரவு தெரிந்துவிடும்.    

எம். எஸ். தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பலமே  இந்த நபர்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட  வீரர்களின்   ஆட்டங்கள் பயங்கர சொதப்பலில் முடிந்தது. அணியின் கேப்டன் தோனியே பல இடங்களில்  சறுக்கி இருக்கிறார்.

இதனால் இந்த அணியின் ஆட்டம்  அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, பஃப் டூ பிளெசிஸ்,   பிராவோ, போன்றவர் களை  நம்பி களத்தில்  இருக்கிறது. இலக்கை எட்டுவதில்  வெற்றியடையும் சென்னை சூப்பர் கிங்ஸ், இலக்கை நிர்ணயிப்பதில் தடுமாற்றம்  இதன் பலபவீனம்.



பந்து வீச்சில் 2018 ஐபிஎல் பட்டியலில்   டாப் பெளலர்கள் லிஸ்ட்டில் 18-வது இடத்துக்கு மேல்தான் சென்னையின் பெளலர்கள் இருக்கிறார்கள்.   ஷர்துல் தாக்கூர்தான் சென்னையின் அதிகபட்ச விக்கெட் டேக்கர். இன்றைய மேட்சில் சென்னையின் பெளலிங் லைன்-அப்பில் நிச்சயம் மாற்றம்  இருக்கும்.   ஷர்துல் தாக்கூர் ,லுங்கி நிகிடி ஆகிய பந்து வீச்சாளர்கள்   அணியில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

லுங்கி எங்கிடி அணிக்குள்  வருவதால் மற்றொரு வெளிநாட்டு பெளலரான டேவிட் வில்லி அணிக்குள் இடம்பெறுவது சிரமம்.   இந்த ஐபிஎல்-ல் மிகச்சிறந்த பெளலிங் அட்டாக்கை  கொண்ட ஐதராபாத் பெளலர்களையே வெளுத்தவர் ரிஷப் பன்ட். புவனேஷ்குமார் ஓவர்களை எல்லாம் அசால்ட்டாக அடித்தார்.

பிராவோவின் பெளலிங்  ஃபார்ம்தான் சென்னைக்கு பெரும்கவலை.

டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டான பிராவோ, டெத் ஓவர்களில் அதிக ரன்களைக் கொடுக்கும் மோசமான பெளலர்களில் ஒருவராக மாறியிருக்கிறார்.

அடித்து ஆடும் பேட்ஸ்மேன்களை சமாளிக்க ஸ்பின்னர்களையும், வேகப்பந்து வீச்சாளர்களையும் மாற்றி மாற்றி இறக்குவார் தோனி. ஸ்பின்னர்களைப்  பொறுத்தவரை, ரவீந்திர ஜடேஜா ஃபுல் ஃபார்முக்கு வந்திருப்பதால் அவருடன் ஹர்பஜன், கரன் ஷர்மா என இரண்டு பெளலர்களையும் தோனி  பயன்படுத்துவார்.

லுங்கி , தீபக் சாஹர், ஷேன் வாட்ஸன், ஹர்பஜன், கரன் ஷர்மா, டிவெய்ன் பிராவோ என்பதுதான் சென்னையின் பெளலிங் லைன்  அப் ஆக இருக்கும்.

மற்றபடி எந்த அணியுடன் மோதினாலும் எந்தவித கவலையும் இன்றி அந்த அணியின்பேட்டிங் , பவுலிங் சாதக பாதங்களை அலசி அதற்கு ஏற்ற  வீரர்களை  களத்தில் இறக்கி அணியின் ஆட்டத்தின் போக்கை பல்ஸ் பார்த்து  கணித்து  ஆடும் சன்ரைசர்ஸ் அணியின்  கேப்டன் வில்லியம்சன்   சாதுர்யம்  எவ்வளவு தூரம் கை  கொடுக்கும் என்று நாளை இரவு தெரிந்து விடும்.



.

மூலக்கதை