பாம்பை உயிரோடு வீதியில் எரித்த இளைஞர்!

PARIS TAMIL  PARIS TAMIL
பாம்பை உயிரோடு வீதியில் எரித்த இளைஞர்!

அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் பாம்பை உயிரோடு சாலையில் எரித்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ரிச்லாண்ட்ஸ் நகரில் உள்ள வால்மார்ட் வாகன நிறுத்துடமிடத்தின் அருகில் எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
 
அதில், சாலையில் ஒரு பாம்பு இருக்கும் நிலையில் சுற்றி சில ஆட்கள் நிற்கிறார்கள், அதில் ஒரு இளைஞர் பாம்பை திடீரென தீயிட்டு கொளுத்த அது வலியால் துடிக்கிறது.
 
அதன் பின்னர் ஒரு ஸ்ப்ரேவை பாம்பு மீது இளைஞர் தெளித்த நிலையில் நெருப்பானது அதிகமாக பின்னர் அணைவது போல வீடியோவில் உள்ளது.
 
இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து விலங்குகள் பாதுகாப்பு அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூலக்கதை