பிரதமர் மோடி இன்று ரஷ்யா பயணம்; புடினை சந்திக்கிறார்

தினமலர்  தினமலர்
பிரதமர் மோடி இன்று ரஷ்யா பயணம்; புடினை சந்திக்கிறார்

புதுடில்லி : ரஷ்ய அதிபர் புடினின் அழைப்பை ஏற்று, பிரதமர் மோடி ஒருநாள் பயணமாக இன்று(மே 21) ரஷ்யா செல்கிறார். அங்கு புடினை சந்திக்கும் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது ரஷ்ய பயணம் குறித்து டுவிட்டரில், மோடி பதிவிட்டதாவது: நட்புணர்வு உடைய ரஷ்ய மக்களுக்கு வாழ்த்துக்கள். சோச்சி நகரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்திக்கிறேன். அவருடனான சந்திப்பு, என்றுமே மகிழ்ச்சிகரமானதாகவே அமைந்துள்ளது. இந்தியா - ரஷ்யா இடையே உள்ள தனிச் சிறப்பு வாய்ந்த உறவு, இந்த சந்திப்பின் மூலம், மேலும் வலுவடையும் என நம்புகிறேன், என பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை