கேன்ஸ் திரைப்பட விழா! - 2018 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு!!

PARIS TAMIL  PARIS TAMIL
கேன்ஸ் திரைப்பட விழா!  2018 ஆம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிப்பு!!

2018 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா விருதுகள் நிகழ்வு நேற்று சனிக்கிழமையுடன் நிறைவுக்கு வந்தது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பல விருதுகள் வழங்கப்பட்டன. 
 
திரைப்பட விழாவில், சிறந்த திரைப்படத்துக்காக வழங்கப்படும் Palme d'Or விருது, "Une affaire de famille" எனும் திரைப்படத்துக்கு வழங்கப்பட்டது. இத்திரைப்படத்தை இயக்கிய ஜப்பானிய இயக்குனர் Hirokazu Kore-Eda பெற்றுக்கொண்டார். 
 
சிறந்த கதாநாயகி விருது Samal Esljamova க்கு கிடைத்தது. Ayka எனும் அகதி கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்தமைக்காக வழங்கப்பட்டது. 
 
சிறந்த நடிகருக்கான விருது இத்தாலிய நடிகர் Marcello Fonte க்கு கிடைத்தது. Dogman திரைப்படத்தில் நடித்தமைக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. 
 
தவிர சிறப்பு Palme d'or விருது பிரெஞ்சு-சுவிஸ் இயக்குனர் Jean-Luc Godard க்கு கிடைத்தது. 
 
அதேபோன்று, Grand Prix விருது, BlacKkKlansman திரைப்படத்தை இயக்கியிருந்த,  அமெரிக்க இயக்குனர் Spike Leeக்கு கிடைத்தது.

மூலக்கதை