கோடையை குளுமையாக்கும் கோயம்புத்தூர் அருகில் அமைந்துள்ள மான்ச்செஸ்டர் ப்ரிஸ்டீஜ்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
கோடையை குளுமையாக்கும் கோயம்புத்தூர் அருகில் அமைந்துள்ள மான்ச்செஸ்டர் ப்ரிஸ்டீஜ்

கொளுத்தும் தமிழ்நாட்டு கோடை வெய்யிலில் இருந்து தப்பிக்க எவருக்கும் உடனே நினைவுக்கு வருவது  ஊட்டி அல்லது கோயம்புத்தூர். இங்கு வசிப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சென்னை வெயிலில் செல்லும்பொது நமக்கு தோன்றுவது இயற்கைதான்.

 

இன்று சென்னை கூட்ட நெரிசல், மற்ற ஊர்களில் உள்ள நீர் பிரச்சினை ஆகியவற்றை சிந்திக்கும் பலர் செட்டில் ஆகவேண்டும் என்று நினைப்பது கோயம்புத்தூர் பகுதியாகும் . இன்று மணல் விற்கும் விலையில் வீடு கட்டுவது, அரசின் நிரந்தரமற்ற மாறிவரும் பல சட்டதிட்டங்களை  உள்வாங்கி   வீடு கட்டுவது அதுவும் நமக்கு உகந்த பக்கத்து, எதிர் வீட்டு சூழலுடன் வீடு அமைவது அவ்வளவு சாதாரணமானதா?   இன்று உண்மையிலேயே திருமணத்தை செய்துபார் , வீட்டைக் கட்டிப்பார் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது..

 

இந்த தேவையை உள்வாங்கிய காட்டன் சிட்டி ( www.CottonCity.in) குழுமம் மேட்டுப்பாளையம் , துடியனூர் -சரணவனம்பட்டி சாலையில் ,    வெள்ளாகினர் என்ற இடத்தில் 72 சிறப்புக் குடியிருப்புகளை ஏற்படுத்தியுள்ளது . இதில் பல்வேறு வசதிகளை ஒரே இடத்தில் பெரும் வகையில் மிக நேர்த்தியாக திட்டமிட்டு ஒரு கனவு வீடுகளாக கட்டியுள்ளனர்.

 

வெளிநாட்டிலிருந்து கோயம்புத்தூர் சென்று செட்டில் ஆக நினைப்பவர்களும், சென்னையிலிருந்து கொயம்புத்தூர் சென்று அமைதியான சூழலில், நல்ல தண்ணீர் வசதியுடன், நல்ல கல்விக்கூடங்களில் படிக்கவைக்க விரும்புபவர்களும் இதில் நிறைந்து வருவதாக அதன் இயக்குனர் திரு.ஸ்ரீதர் குறிப்பிடுகிறார்.

 

பன்னாட்டு சொகுசு வீடுகளின் அழகியலை, வசதிகளை உள்வாங்கி கட்டியுள்ளதாகக் கூறும் காட்டன் சிட்டி  www.CottonCity.in) -யின் இயக்குனர், இது தரத்தைப் பற்றி கவலைப்படுபவர்கள், மேம்பட்ட வாழ்வியல் சூழலை விரும்புபவர்கள் அதிகம் தேர்ந்தெடுக்கும் இடமாக விளங்குவதாக குறிப்பிடுகிறார் .

 

அப்படி என்னதான் இந்த சொகுசு வீடுகளில் இருக்கும் என்று பார்த்தால், சென்னையில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிகளில் இருக்கும் அனைத்து வசதிகளும் இதில் இருப்பதாக, இதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைத்து இந்த வீடுகளை கட்டியுள்ளோம் என்று கூறுகின்றனர்.

 

மேலும் விவரங்களுக்கு அவர்களது இணையதளத்தை www.CottonCity.inதொடர்புகொள்ளவும்.

மூலக்கதை