'இ - விசா' திட்டத்தால் ரூ.1,400 கோடி வருவாய்

தினமலர்  தினமலர்
இ  விசா திட்டத்தால் ரூ.1,400 கோடி வருவாய்

புதுடில்லி : சுற்றுலா பயணியருக்கு, 'இ - விசா' வழங்கும் திட்டம் மூலம், மத்திய அரசுக்கு, 1,400 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கடந்த, 2014 முதல், 163 நாடுகளை சேர்ந்த பயணியருக்கு, 'இ - விசா' வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. வழக்கமான விசாக்களுக்கு மாறாக, இ - விசா, மின்னணு முறையில் வழங்கப்படுகிறது.

வெளிநாட்டு பயணியர், இந்தியாவில் நுழையும்போது, விமான நிலையம் அல்லது துறைமுகத்தில், பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு அதிகாரிகளால், கம்ப்யூட்டர்கள் மூலம், இ - விசாக்கள் சரிபார்க்கப்பட்டு அனுமதி வழங்கப்படும்.

இ - விசா மூலம், நான்கு ஆண்டுகளில், அரசுக்கு, 1,400 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 2017ல், 19 லட்சம் பயணியர், இ - விசாக்கள் பெற்றுள்ளனர். 2018ல், இந்த எண்ணிக்கை, 25 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை