விவசாயத்தில் சோலார் தொழில்நுட்பம் மாற்றத்தை நோக்கி...!நீர் மேலாண்மையில் அதிகரிக்கும் ஆர்வம்

தினமலர்  தினமலர்
விவசாயத்தில் சோலார் தொழில்நுட்பம் மாற்றத்தை நோக்கி...!நீர் மேலாண்மையில் அதிகரிக்கும் ஆர்வம்

திருப்பூர்:விவசாய நிலங்களில், 90 சதவீத மானியத்தில், 'சோலார் பம்ப்செட்' அமைக்கும் திட்டம் கை கொடுப்பதால், மின் இணைப்பு குறித்த கவலை நீங்கியுள்ளது.விவசாய பணிகளை நவீனமயமாக்குவதிலும், சாகுபடி பணிகளை துரித மாக முடிக்கவும், வேளாண் பொறியியல் துறை பல் வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. வேளாண் பணிகளுக்கு தேவையான கருவிகளை, மானிய விலையில் வழங்கி வருகிறது.
தட்டு வெட்டும் கருவி, உழவுக்கு பயன் படுத்தும் 'டிராக்டர்', அறுவடை இயந்திரங்கள் வாங்க மானியம் என, பல உதவிகள் வழங் கப்படுகின்றன. நெல் விவசாயிகள் பயன் பெற, குறைந்த வாடகைக்கு, அறுவடை இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.இதற்கிடையில், விவசாயிகள் பலர் இல வச மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்து, அவற்றை வாங்கியும் இருந்தனர். இந்நிலையில், கடந்த, 2010ல் ஏற் பட்ட மின்வெட்டு, விவசாயத்தை பலமாக பதம் பார்த்தது. மின்சார உதவியுடன் சரியான நேரத்தில் மோட்டரை இயக்கி, பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடி யாமல், ஒட்டு மொத்த பயிர் சாகுபடியும் பாதித்தது.
அதற்கு பின், சோலார் மின்சக்தியில் இயங்கும், 'பம்ப்செட்' திட்டம் அறிவிக்கப்பட்டது. திறந்தவெளி மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து பாசனம் செய்ய, சோலார் மின்சக்தியில் இயங்கும் 'பம்ப்செட்' அமைக்க, 80 சதவீதம் மானியம் வழங்கப்பட்டது.அவற்றை வாங்குவதில், விவசாயிகள் ஆர்வம் காட்டியதால், மானியம், 90 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இத்திட் டத்தில், 5 - 10 எச்.பி., திறனுள்ள மோட்டார்களை பொருத்திக் கொள்ள முடியும்.கடந்தாண்டு, 21 விவ சாயிகள் பயனடைந்த நிலையில், 2018-19ல், 53 விவசாயிகளுக்கு, 'சோலார் பம்ப்செட்' மானியம் வழங்கஇலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து, வேளாண் பொறியியல் துறை அதி காரிகள் கூறுகையில், 'நடப்பாண்டு, 53 விவ சாயிகளுக்கு, சோலார் பம்ப்செட் அமைத்து கொடுக்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கு, பதிவு மூப்பு அடிப் படையில் முன்னுரிமை அளிக்கப்படும்.விவசாயிகளின் பங்களிப் பாக, 10 சதவீத தொகையை செலுத்தினால், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் தள வாடங்களை பெற்று, 90 சதவீத மானியத் துடன், சோலார் பம்ப்செட் அமைத்து கொடுக்கப்படுகிறது.
'கடந்தாண்டுகளில் அமைக்கப்பட்ட 'பம்ப்செட்'கள் நல்ல முறையில் இயங்கி வருகின்றன. மேலும், விபரங்களுக்கு, வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலு வலகத்தை அணுகலாம்' என்றனர்.இலவசத்துக்கு இணை தான்...இலவச மின்சாரம் பெற்ற விவசாயிகளுக்கு, மானியத்தில் சோலார் மின்னாற்றல் பெறுவதில், பல கட்டுப்பாடுகள் உள்ளன. மின்சாரத்தை விட, சூரிய சக்தியில் இயங்கும் சோலார் தொழில்நுட்பம் சிறந்தது; அதுவும், 90 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது என்ற நிலையில், இதுவும், இலவசத்துக்கு இணை தான். ஆக, இலவச மின்சாரம் மீதான ஆர்வம், குறையத் துவங்கியிருக்கிறது.

மூலக்கதை