தமிழகத்தில் கூடுதலாக 7 இடங்களில் ‘இ – நாம்’ஆன்லைன் விற்பனை சந்தை

தினமலர்  தினமலர்
தமிழகத்தில் கூடுதலாக 7 இடங்களில் ‘இ – நாம்’ஆன்லைன் விற்பனை சந்தை

தமி­ழ­கத்­தில், ‘இ – நாம்’ எனும், ஆன்­லைன் வேளாண் விளை­பொ­ருட்­கள் விற்­பனை சந்தை மையத்தை, கூடு­த­லாக ஏழு இடங்­களில் அமைக்க, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.விவ­சா­யி­கள், வேளாண் விளை பொருட்­களை ஆன்­லைன் மூலம் விற்க, தேசிய வேளாண் விற்­பனை சந்­தையை மத்­திய அரசு துவங்­கி­யது. www.enam.gov.in இணை­ய­த­ளம் மூலம், விவ­சா­யி­கள் தங்­களின் விளை பொருட்­க­ளுக்கு தேவை எங்கு உள்­ளது, எவ்­வ­ளவு தேவை உள்­ளிட்ட தக­வல்­களை அறிந்து, ஆன்­லை­னி­லேயே விற்­பனை செய்­ய­லாம்.அந்­தந்த பொருட்­க­ளுக்கு விவ­சா­யி­களே விலை நிர்­ண­யிக்­க­லாம். இடை­த­ர­கர்­கள் தொல்லை இருக்­காது.தேசிய அள­வில், 585 வேளாண் ஒழுங்­கு­முறை விற்­பனை கூடங்­கள், ஆன்­லைன் விற்­பனை சந்­தை­யோடு இணைக்­கப்­பட்­டுள்ளன. தமி­ழ­கத்­தில், மதுரை, திண்­டுக்­கல், தேனி, ராம­நா­த­பு­ரம், கோவை, வேலுார் உட்­பட, 23 இடங்­களில் அமைக்­கப்­பட்­டுள்ளன.மூன்று மாதத்­தில், இந்த சந்தை மூலம், 20 கோடி ரூபாய்க்­கும் மேல் வர்த்­த­கம் நடந்­துள்­ளது. விவ­சா­யி­கள் மத்­தி­யி­லும் நல்ல வர­வேற்பு கிடைத்­துள்­ளது.எனவே, மாநி­லங்­களில் ஆன்­லைன் விற்­பனை சந்­தையை அதி­கப்­ப­டுத்த மத்­திய அரசு முடி­வெ­டுத்­துள்­ளது. அதன்­படி, தமி­ழ­கத்­தில் கூடு­த­லாக ஏழு இடங்­களில் ஆன்­லைன் சந்தை அமைக்­கப்­பட உள்­ளது. இதற்­கான, இடத்­தேர்­வும் நடந்து வரு­கிறது.இம்­மு­றையை மேலும் எளி­மை­யாக்க, இ – நாம், ‘மொபைல் ஆப்’ தயா­ரிக்­க­வும் திட்­ட­மிட்­டுள்­ளது.
– நமது நிருபர் –

மூலக்கதை