சென் நதியில் SeaBubbles - மிதக்கும் மகிழுந்து!!

PARIS TAMIL  PARIS TAMIL
சென் நதியில் SeaBubbles  மிதக்கும் மகிழுந்து!!

நீண்ட காலமாக பரிசோதனை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், கடந்த புதன்கிழமை சென் நதியில், மீண்டும் SeaBubble மிதக்கும் மகிழுந்து வெள்ளோட்டம் விடப்பட்டது. 
 
பிரெஞ்சு போக்குவரத்தில் மிக முன்னோடியாகவும், எதிர்காலத்தின் மிகவும் வரவேற்றை பெற உள்ள இந்த புதிய தொழில்நுட்பம், மே மாதம் 16 ஆம் திகதி புதன்கிழமையில் இருந்து இம்மாதம்  28 ஆம் திகதி வரை பரீட்சாத்த முயற்சிக்காக இயங்க உள்ளது. இந்த நாட்களில் பரிஸ் மக்கள் இந்த மிதக்கும் மகிழுந்தை காணக்கூடியதாக இருக்கும். வண்ணாத்துப்பூச்சியின் இறக்கையைப் போன்ற இருபக்க கதவுகளை கொண்ட இந்த மிதக்கும் மகிழுந்து, முன் பகுதியில் சாரதி அமர்ந்திருக்க பின் பக்க இருக்கையில் இருவர் அமரக்கூடியதாக இருக்கும் எனவும், தண்ணீர் மட்டத்துக்கு மேலே 50 cm  உயரத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தற்போது இந்த மிதக்கும் மகிழுந்து 8 இல் இருந்து 12 கிலோமீட்டர்கள் வேகத்தில் பயணிக்கக்கூடியதாக இருக்கும் எனவும், எதிர்காலத்தில் 25KMph வேகமாக அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

மூலக்கதை