'உங்களால் முடியும்!' 'தினமலர்' சார்பில், திருப்பூரில் இன்று நடக்கிறது:மாணவர்களே, பெற்றோரே, 'மிஸ் பண்ணிடாதீங்க'

தினமலர்  தினமலர்
உங்களால் முடியும்! தினமலர் சார்பில், திருப்பூரில் இன்று நடக்கிறது:மாணவர்களே, பெற்றோரே, மிஸ் பண்ணிடாதீங்க

திருப்பூர்:'தினமலர்' சார்பில் 'உங்களால் முடியும்' வழிகாட்டி நிகழ்ச்சி, இன்று மாலை, நடக்கிறது. இன்ஜி., கவுன்சிலிங் குறித்த, பல்வேறு ஆலோசனைகளை கல்வியாளர்கள் வழங்குவதால், மாணவர்களும், பெற்றோர்களும் பங்கேற்று, இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் எந்த பாடப்பிரிவை, எந்த கல்லுாரியில் தேர்வு செய்யலாம் என்பதில் பல்வேறு சந்தேகம் நிலவுகிறது. மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கு வழிகாட்டும் வகையில், 'தினமலர்' சார்பில் இன்று (19ம் தேதி) 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி திருப்பூரில் நடத்தப்படுகிறது.'தினமலர்' நாளிதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சி, திருப்பூர், பல்லடம் ரோடு, ராமசாமி கவுண்டர் முத்தம்மாள் திருமண மண்டபத்தில், இன்று மதியம், 3:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை நடக்கிறது.இதில், 'ஆன்லைனில்' விண்ணப்பிப்பது தொடர்பான அனைத்து சந்தேகங்களுக்கும் விடையளிக்கப்படுகிறது.
எந்த கல்லுாரியில், எந்த பாடப்பிரிவை தேர்வு செய்வது, எந்த பாடத்தை தேர்வு செய்தால், எதிர்காலம் சிறப்பாக இருக்கும், வேலை வாய்ப்பு அதிகம் இருக்கும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.
இன்ஜினியரிங் கல்லுாரிகளின் பல்வேறு பாடப்பிரிவுகள் குறித்து, கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி, இன்ஜினியரிங் கவுன்சிலிங் விதிமுறை குறித்து, அண்ணா பல்கலை, காலேஜ் ஆப் இன்ஜினியரிங் முன்னாள் டீன் நாராயணசாமி ஆகியோர் விளக்கம் அளிக்கின்றனர்.இந்நிகழ்ச்சியை, ஸ்ரீ குரு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஸ்ரீ ஈஸ்வர் காலேஜ் ஆப் இன்ஜினியரிங், முத்தையம்மாள் இன்ஜினியரிங் இன்ஸ்டியூட் இணைந்து வழங்குகின்றன.
மாணவர்கள், பெற்றோருடன் பங்கேற்று இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் நிலவும் குழப்பம், சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் பெறலாம். இன்ஜினியரிங் கவுன்சிலிங் செல்லும் மாணவர்களுக்காக இலவசமாக நடக்கும் இந்நிகழ்ச்சியில், பங்கேற்று பயனடைய, மாணவர்களே, பெற்றோரே மறந்து விடாதீர்கள்.

மூலக்கதை