வெற்றி தோல்வி எதைப்பற்றியும் கவலைப்படாமல் சென்னையுடன் மோதும் டெல்லி

தமிழ் முரசு  தமிழ் முரசு
வெற்றி தோல்வி எதைப்பற்றியும் கவலைப்படாமல் சென்னையுடன் மோதும் டெல்லி

புதுடெல்லி: டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறும் ஐ. பி. எல். கிரிக்கெட்  52-வது லீக் ஆட்டத்தில்  சென்னை சூப்பர் கிங்சும், டெல்லி டேர்டெவில்சும் மோதுகின்றன.

டோனி தலைமையிலான சென்னை அணி  இதுவரை ஆடிய  12 ஆட்டங்களில்  8 வெற்றி, 4 தோல்வி என  16 புள்ளிகளுடன் தற்போது பட்டியலில் 2-வது இடம் வகிக்கிறது. ஏற்கனவே பிளே  ஆப் சுற்றுக்கான வாய்ப்பை  தொட்டு விட்ட நிலையில் இன்று களம்  காண்கிறது.

சென்னை அணி 5 நாட்கள் ஓய்வுக்கு பிறகு புத்துணர்ச்சியுடன் இன்று   13வது ஆட்டத்தை ஆட இருக்கிறது. இந்த அணியில்  இதுவரை 535 ரன் எடுத்த அம்பதி ராயுடு,  ஷேன் வாட்சன் 424 ரன்கள்,  கேப்டன் டோனி 413 ரன்கள், சுரேஷ் ரெய்னா 315 ரன்கள்  என  பேட்டிங்கில் தொடர் முன்னிலை வகிக்கும் வீரர்கள்  இருப்பதால் பேட்டிங் குறித்த கவலை இந்த அணிக்கு இல்லை.

அதே போல பீல்டிங்கிலும்  சொதப்பாமல்  ஆடி வருகிறார்கள்.

இந்த அணியின் பந்து வீச்சாளர்களாகிய  ஷர்துல் தாகூர் 11 விக்கெட்,  வெய்ன் பிராவோ 9 விக்கெட்,  தீபக் சாஹர் 7 விக்கெட் எடுத்து அணியின் ஆணி வேராக இருக்கிறார்கள்.   பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன்சிங் ஆகியோர் இதுவரை பெரியஅளவில்  சோபிக்க வில்லை.

இன்றைய ஆட்டத்திலாவது இவர்கள் பந்து வீச்சு சிறப்பாக அமையுமா என்று தெரியவில்லை. ஐ. பி. எல்.

வரலாற்றில் இறுதிப்போட்டிக்கு முன்னேறாத ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ். இந்தத் தொடரில் இதுவரை ஆடிய  ஆட்டங்களில்  3 வெற்றி, 9 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.

ஆனாலும் ஆடுகளத்தில் முகத்தில்  எந்த வித தோல்வியையும் காட்டிக் கொள்ளாமல் எதார்த்தமான நிலையில் இந்த அணியின் ஒட்டு மொத்த வீரர்களும்  விளையாடி வருவது கிரிக்கெட் பார்வையாளர்கள் அனைவருக்கும் ஆச்சயர்த்தை உண்டாக்கி இருக்கிறது.

ரிஷாப் பன்ட் 582 ரன்கள்,  கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 386 ரன்கள், பிரித்வி ஷா 216 ரன்கள்  எடுத்து இந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களாக கலக்கி வருகிறார்கள்.   பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் தவிர மற்றவர்கள் பார்மில் இல்லை.

இதே போல் பெரிதும்  எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்,   அபிஷேக் ஷர்மா, ஹர்ஷல் பட்டேல், அமித் மிஸ்ரா ஷபாஸ் நதீம், சந்தீப் லாமிச்சன்னே, ஜூனியர் டாலா, டிரென்ட் பவுல்ட்  ஆகியோர் இன்னும் சிறப்பாக விளையாடாதது டெல்லியை தோல்வியில் தள்ளி இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும் கடந்த கால தோல்விகள்  இவர்களுக்கு மிகப் பெரிய தடையாக முன்  நிற்கிறது.


.

மூலக்கதை