அவதானம்! 4 ஆம் வழி மெற்றோவில் - மூடப்பட உள்ள ஏழு தொடரூந்து நிலையங்கள் !!

PARIS TAMIL  PARIS TAMIL
அவதானம்! 4 ஆம் வழி மெற்றோவில்  மூடப்பட உள்ள ஏழு தொடரூந்து நிலையங்கள் !!

நான்காம் இலக்க மெற்றோக்கள் இயங்கும் ஏழு நிலையங்கள் திருத்தப்பணிகளுக்காக மூடப்பட்டுள்ளன. நாளை சனிக்கிழமை தொடங்கி அடுத்துவரும் மூன்று நாட்களுக்கு இந்த நிலையங்கள் மூடப்பட உள்ளன. 
 
Montparnasse-Bienvenüe இல் இருந்து Mairie de Montrouge வரையான நிலையங்கள் மூடப்பட உள்ளன. சமிக்ஞ்சை விளக்குகள் திருத்தப்பணிகளுக்காக இந்த நிலையங்கள் மூடப்பட உள்ளன. இதனால்,
 
Vavin, 
Raspail, 
Denfert-Rochereau, 
Mouton-Duvernet, 
Alésia, 
Porte d'Orléans,
Mairie de Montrouge
 
ஆகிய ஏழு நிலையங்கள், முறையே மே 19, மே 20, மே 21 ஆகிய திகதிகளில் மூடப்பட உள்ளது. 
 
இதனால் பயணிகள் யாரும் அச்சமடையத்தேவையில்லை எனவும், மெற்றோவின் நேரப்படி குறித்த நிலையங்களுக்கு தொடரூந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது.

மூலக்கதை