காவிரியின் இறுதி தீர்ப்பு நெருங்குகிறது .. இன்றைய தீர்ப்பில் தமிழகத்திற்கு சாதகமான முக்கிய அம்சங்கள்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

 

இன்று நடந்த காவிரி விசாரணையில் காவிரி நீர் பங்கீட்டை நிர்வகிக்கும் அமைப்பிற்கு, 'காவிரி மேலாண்மை வாரியம்' என, பெயர் சூட்டுவதை ஏற்றுக் கொள்வதாக, நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை இன்று தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றைய முக்கிய அம்சங்கள்: வரைவு திட்டத்தில் அமைப்பு என்ற பெயரை காவிரி மேலாண்மை வாரியம் என மத்திய அரசின் வரைவு திட்டத்தை திருத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நீர் பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம்தான் தீர்மானிக்கும். இதில் மத்திய அரசு தலையிட கூடாது. எந்த மாநிலத்துக்கு எவ்வளவு நீர் திறந்து விடுவது உள்ளிட்டவை குறித்தும் வாரியமே முடிவு செய்ய வேண்டும். அதுபோல் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான தலைமையிடம் பெங்களூரில் அமைக்கக் கூடாது, டெல்லியிலேயே அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத்தில் இன்னும் எந்த அரசும் பொறுப்பேற்காததால் காவிரி வழக்கை ஒத்திவைக்க கர்நாடகா வலியுறுத்தியது. ஆனால் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மேலாண்மை வாரியம் அனுமதி இல்லாமல் கர்நாடகாவோ தமிழகமோ அணை, தடுப்பணை கட்ட கூடாது. திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை இன்றே தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

இன்று நடந்த காவிரி விசாரணையில் காவிரி நீர் பங்கீட்டை நிர்வகிக்கும் அமைப்பிற்கு, 'காவிரி மேலாண்மை வாரியம்' என, பெயர் சூட்டுவதை ஏற்றுக் கொள்வதாக, நீதிமன்றத்தில், மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக, திருத்தப்பட்ட வரைவு செயல் திட்டத்தை இன்று தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இன்றைய முக்கிய அம்சங்கள்:

வரைவு திட்டத்தில் அமைப்பு என்ற பெயரை காவிரி மேலாண்மை வாரியம் என மத்திய அரசின் வரைவு திட்டத்தை திருத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நீர் பங்கீட்டை காவிரி மேலாண்மை வாரியம்தான் தீர்மானிக்கும். இதில் மத்திய அரசு தலையிட கூடாது. எந்த மாநிலத்துக்கு எவ்வளவு நீர் திறந்து விடுவது உள்ளிட்டவை குறித்தும் வாரியமே முடிவு செய்ய வேண்டும். அதுபோல் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான தலைமையிடம் பெங்களூரில் அமைக்கக் கூடாது, டெல்லியிலேயே அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகத்தில் இன்னும் எந்த அரசும் பொறுப்பேற்காததால் காவிரி வழக்கை ஒத்திவைக்க கர்நாடகா வலியுறுத்தியது. ஆனால் இந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. மேலாண்மை வாரியம் அனுமதி இல்லாமல் கர்நாடகாவோ தமிழகமோ அணை, தடுப்பணை கட்ட கூடாது. திருத்தப்பட்ட வரைவு அறிக்கையை இன்றே தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

மூலக்கதை