மலேஷிய முன்னாள் துணை பிரதமர் விடுதலை

தினமலர்  தினமலர்
மலேஷிய முன்னாள் துணை பிரதமர் விடுதலை

கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் இன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்று மகாதீர் முகமது மலேசியா பிரதமராக பதவியேற்றார். தொடர்ந்து, பாலியல் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையில் உள்ள அன்வர் இப்ராஹிமுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. இதற்கு அந்நாட்டு மன்னர் ஒப்புதல் வழங்கினார். இதனையடுத்து அன்வர் இப்ராஹிம் இன்று சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

மூலக்கதை