அசரவைக்கும் ஒன் ப்ளஸ் 6 - லண்டன் விழாவில் அறிமுகம்!

விகடன்  விகடன்
அசரவைக்கும் ஒன் ப்ளஸ் 6  லண்டன் விழாவில் அறிமுகம்!

ஸ்மார்ட் போன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒன் ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன் லண்டனில் நடைபெற்ற பிரமாண்ட நிகழ்ச்சியில் அதிகாரபூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. 

ஆப்பிள், சாம்சங் என முன்னணி நிறுவனங்கள் மொபைல் விற்பனையில் முந்திக் கொண்டாலும், பலருக்கு ஃபேவரைட் 'ஒன் ப்ளஸ்' மொபைல்கள். ஒன் ப்ளஸ் 1 என்ற ஸ்மார்ட் போன் மாடலுடன் சந்தையில் விற்பனையைத் தொடங்கிய அந்த நிறுவனம், அடுத்தடுத்த மாடல்களுடன் ஸ்மார்ட் போன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. ஒன் ப்ளஸ் 5  மற்றும் ஒன் ப்ளஸ் 5டி மாடல்களுக்குப் பின்னர் ஒன் ப்ளஸ் 6 ஸ்மார்ட் போனை அந்த நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியது. 

ஒன் ப்ளஸ் 6 ஸ்மார்ட்போன், 6.28 இன்ச் ஸ்கீரினுடனுடன் வெளிவருகிறது. 6 ஜிபி ரேம் - 64/128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் - 128/256 ஜி.பி. மெமரியுடன் இரு வேறு வேரியண்ட்களில் ஒன் ப்ளஸ் 6 கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேகம் என்ற ஒற்றை இலக்கோடு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடல், குவால்கோம் எஸ்டி 845 ஸ்நாப்ட்ராகன் 845 புராஸஸருடன் வெளிவருகிறது. இன்றைய நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்தியா மற்றும் சீனாவுக்கான அறிமுக நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வரும் திங்கள்கிழமை (மே 21) முதல் விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது. 
 

மூலக்கதை