கர்நாடகாவில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை! - திருநாவுக்கரசர்  

விகடன்  விகடன்
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை!  திருநாவுக்கரசர்  

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு இன்று வருகை தந்த காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``கர்நாடகாவில் காங்கிரஸ் 38 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளது. இது பா.ஜ.கவை விட 2 சதவிகிதம் கூடுதல் ஆகும். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க ஆளுநர் காலம் தாழ்த்துவது பி.ஜே.பி குதிரை பேரம் நடத்துவதற்கு வழிவகுக்கும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி ஐந்து ஆண்டுகள் முடிவடைந்ததாலும், இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தாலும்  ஆட்சி அமைக்க விரும்பவில்லை. 

மேலும், ஒரு கூவத்தூர் தயார் என்ற கேரளச் சுற்றுலாத் துறையின் பதிவுக்குகு மோடியும், மத்திய அரசும்தான் பதில் கூற வேண்டும். காவிரி பிரச்னை பற்றி ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூடி அடுத்து எடுக்கவுள்ள நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்'' என்றார். முன்னதாக மதுரை விமான நிலையத்தில் பேசியவர், ``கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸையும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தையும் ஆளுநர் அழைக்க வேண்டும்''என்று கூறினார். 

மூலக்கதை