காஷ்மீரில் மோடிக்கு எதிராக போராட்டம்: பிரிவினை அமைப்புகள் முடிவு

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீரில் மோடிக்கு எதிராக போராட்டம்: பிரிவினை அமைப்புகள் முடிவு

நகர்: பிரதமர் மோடியின் காஷ்மீர் வருகையின் போது அவருக்கு எதிராக போராட்டம் நடத்திட பிரிவினைவாத அமைப்புகள் முடிவு செய்துள்ளன. காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜ கூட்டணி ஆட்சி நடக்கிறது.

மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மெகபூபா முதல்வராக  இருக்கிறார். பாஜவுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் கதுவா பகுதியில் நடைபெற்ற சிறுமி பலாத்கார கொலை  குற்றவாளிகளுக்கு ஆதரவாக பாஜ அமைச்சர்கள் இருவர் கருத்து தெரிவித்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து அவர்கள் இருவரும்  ராஜினாமா செய்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பாஜவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது.



இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி வரும் 19-ம் தேதி காஷ்மீர் செல்கிறார். அங்கு கிஷன்கங்காவில் 330 மெகாவாட் நீர்மின்திட்டத்தை துவக்கி  வைத்தும், ஷெ ரீ காஷ்மீர்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொள்கிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி வருகையை கண்டித்து  காஷ்மீரின் பிரிவினைவாத அமைப்பு தலைவர்கள் மெகா போராட்டம் நடத்திட உள்ளனர். இது தொடர்பாக பிரிவினைவாத அமைப்பு தலைவர்களான சையத் அலிஷா கிலானி, யாசின் மாலிக், மிர்வாஸ் உமர் பரூக் ஆகியோர் கூட்டாக  ஆலோசனை நடத்தினர்.

பின்னர் போராட்டம் நடத்திடவும் கடையடைப்பு பேராட்டம் நடத்திடவும் முடிவு செய்துள்ளனர்.

.

மூலக்கதை