கர்நாடக தேர்தல் தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடக தேர்தல் தமிழ் வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி

பெங்களூரு: கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் சார்பாக போட்டியிட்ட 30-க்கும்  மேற்பட்ட தமிழ் வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் (1), மஜத (1), இந்திய குடியரசு கட்சி (4), சிபிஎம் (1), அதிமுக (4), ஆம் ஆத்மி(2) உள்ளிட்ட கட்சிகள்  சார்பாகவும், சுயேச்சையாகவும் 30-க்கும் மேற்பட்ட தமிழர்கள் களமிறங்கினர். காங்கிரஸ் சார்பில் மேயர் சம்பத் ராஜ் சி. வி. ராமன் நகரிலும், மஜத  சார்பில் கோலார் தங்கவயலில் மு.

பக்தவசலம், இந்திய குடியரசு கட்சியின் எஸ். ராஜேந்திரன் ஆகியோர் தோல்வி கண்டனர்.

 இதுதவிர அதிமுக  சார்பில் போட்டியிட்ட 4 வேட்பாளர்களும், ஆம் ஆத்மி கட்சியின் 2 வேட்பாளர்கள், கோலார் தங்கவயலில் போட்டியிட்ட 11 தமிழ் வேட்பாளர்களும்  தோல்வி அடைந்தனர்.

இதில் ஆம் ஆத்மி, அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை