டெல்லியில் மீண்டும் புழுதிப்புயல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லியில் மீண்டும் புழுதிப்புயல்

புதுடெல்லி: டெல்லியை இன்று அதிகாலை மீண்டும் புழுதி புயல் தாக்கியது. இதனால் நகரம் முழுவதும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக வட மாநிலங்கள் முழுவதும் புழுதி புயல் தாக்கிவருகிறது. புழுதி புயல் மற்றும் கனமழைக்கு டெல்லி, உ. பி, ஆந்திரா உள்ளிட்ட  5 மாநிலங்களில் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

 போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்நிலையில்  இன்று அதிகாலை மீண்டும் பலத்த  காற்றுடன் புழுதியும் சேர்ந்து தாக்கியதால் டெல்லி மாநகர் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது.
அடுத்த 48 முதல் 72 மணி நேரத்திற்கு பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக  இருக்கும் படி எச்சரித்துள்ளது..

மூலக்கதை