வாரணாசியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆனது

தமிழ் முரசு  தமிழ் முரசு
வாரணாசியில் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆனது

லக்னோ: வாரணாசியில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று  மாலை அந்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததில், பாலத்தின் கீழ் நின்றிருந்த வாகனங்கள் நொறுங்கின.

அவ்வழியாக சென்றவர்களும் இதில்  சிக்கினர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.விபத்து நடந்த  இடத்தில் இடிபாடுகளை அகற்றும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு  தலா ரூ. 5 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.


.

மூலக்கதை