33% பெண்களுக்கு பாலியல் தொல்லை: ஆய்வில் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
33% பெண்களுக்கு பாலியல் தொல்லை: ஆய்வில் தகவல்

புதுடெல்லி:இந்தியாவில் மூன்றில் ஒரு இளம் பெண்ணுக்கு அதாவது 33 சதவீத பெண்களுக்கு பாலியல் தொல்லை ஏற்படுவதாக, தனியார் அமைப்பு நடத்திய  ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய பெண்களின் உலகம்’ என்ற பெயரில், இளம் பெண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்து, ஒரு தனியார் அமைப்பு  ஆய்வு நடத்தியது.

 டெல்லி, மஹாராஷ்டிரா, தெலங்கானா, மேற்கு வங்கம், அசாம், மத்திய பிரதேச மாநிலங்களில், 30 நகரங்கள், 84 கிராமங்கள், 12  மாவட்டங்களில், 4,000 இளம் பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடம் கருத்து கேட்கப்பட்டது.

இந்த அமைப்பின் ஆய்வறிக்கை நேற்று  வெளியிடப்பட்டது.

இதில், மூன்றில் ஒரு இளம் பெண், பொது இடங்களில், பாலியல் தொல்லைக்கும், ஐந்தில் ஒரு பெண், பலாத்காரத்துக்கும்  ஆளாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை