சாம்பலைக் கக்கும் ஹவாயி எரிமலை! விமானச் சேவைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

PARIS TAMIL  PARIS TAMIL
சாம்பலைக் கக்கும் ஹவாயி எரிமலை! விமானச் சேவைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

அமெரிக்காவின் ஹவாயி தீவிலுள்ள கீலாவேயா எரிமலை சென்ற வாரம் குமுறத் தொடங்கியது. அது எரிமலைக் குழம்பையும், பாறைகளையும் கக்கியது.
 
தற்போது அந்த எரிமலை சாம்பலைக் கக்கி வருவதால், அது விமானச் சேவைகளுக்குப் புதுச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
 
எரிமலை சாம்பலைக் கக்குவதால் அது மறுபடியும் வெடிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது, அது விமானங்கள் பறக்கும் வழிகளை பாதிக்கும் வாய்ப்புள்ளதால், விமானச் சேவைகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
கீலாவேயா எரிமலையில் இருந்து வரும் சாம்பல் புகை 12,000 அடி உயரம் வரை செல்கிறது. அது தீவிலுள்ள சாலைகளைத் தூசியால் மூடிவருகிறது.
 
அந்த சாம்பல் புகை ஆரோக்கியமற்றது என்பதால் கண் எரிச்சல், தும்மல் போன்றவை ஏற்படும் வாய்புகள் அதிகம்.
 
எரிமலை வெடிப்பால் 37 வீடுகள் நாசமாகின, 2,000திற்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
 
எரிமலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக ஹவாயி விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
 
எரிமலை வெடிப்பால் ஹவாயி தீவின் சுற்றுலாத்துறைக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மூலக்கதை