மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அலெக்ஸாண்டர் ஜெர்வ் சாம்பியன்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அலெக்ஸாண்டர் ஜெர்வ் சாம்பியன்

மாட்ரிட்: ஸ்பெயினில்  நடைபெறும்  மாட்ரிட்  சர்வதேச  ஓபன் டென்னிஸ் போட்டியில்  ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியைசேர்ந்த அலெக்ஸாண்டர் ஜெர்வ், ஆஸ்திரியாவை சேர்ந்த  டோமினிக் தீமை   6-4 6-4  என்கிற செட் கணக்கில்  தோற்கடித்து  வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளார். டோமினிக்  உலக தர வரிசையில் 4வது இடத்தில் இருந்த வீரர் ஆவார்.

21 வயதாகும் அலெக்ஸாண்டர், கடத்த ஞாயிற்றுகிழமை ஷ்வாக்கர்யுடன் மோதிய போது  அதிரடி ஆட்டங்களால் ஷ்வாக்கரை திணறடித்தார். அப்போதே அலெக்ஸாண்டர் மீது உலக டென்னிஸ் பார்வையாளர்களின்  கவனம் திரும்பியது.

அடுத்தடுத்து இந்த  சீரியஸில்  9 ஆட்டங்களில்  8  ஆட்டங்களில்  வெற்றி பெற்றுள்ளார். தரவரிசைப் பட்டியலில் உலகின் முதலாவது இடத்தைப் பிடித்த  செர்பியாவைச் சேர்ந்த நோவாக் ஜோக்கொவிச், அலெக்ஸாண்டர் ஆட்டத்தினை  பாராட்டி இருந்தார்.



இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து இவர் நிருபர்களிடம் கூறியதாவது:   மாட்ரிட்   வெற்றி பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. உலகின் முதல் நிலை ஆட்டக்காரர்களுடன் இனி வரும் அடுத்தடுத்த பட்டங்களுக்காக விளையாடப் போகையில் நிறைய கற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறேன்.    மாட்ரிட்   ஆட்டங்களில்  உலகின் முதல் நிலை வீரர்கள்  தோல்வியில் வெளியேறியபோது  வருத்தப்பட்டேன்.

இந்த வெற்றியை அடுத்து ஆடப் போகும் ஆட்டங்களுக்கு முன்னோட்டமாக பார்க்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை