ஆசிய கோப்பை கால்பந்து போட்டி : சர்வதேச அணிகளுடன் முன்னதாக மோதும் இந்திய வீரர்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆசிய கோப்பை கால்பந்து போட்டி : சர்வதேச அணிகளுடன் முன்னதாக மோதும் இந்திய வீரர்கள்

புதுடெல்லி: வரும்  ஜூன் 1ம் தேதி மும்பையில் ஹீரோ இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கிறது. இதற்காக இந்திய கால்பந்து அணி தேசிய பயிற்சி முகாமுக்கு மொத்தம் 30 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் 30 பேரும்  வரும் ஜனவரியில் நடக்கவுள்ள   ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிக்கான  முன்மாதியான  ஆட்டத்தை ஆட வாய்ப்பு உள்ளதாக  இந்திய அணியின் பயிற்சியாளர்  ஸ்டீபன் கூறியுள்ளார். வரும் ஜனவரியில்  ஆசியக் கோப்பை கால்பந்து போட்டி நடக்க இருக்கிறது.

இந்த கோப்பைக்கான போட்டியில்   இந்திய அணி பங்கேற்கிறது. தற்போது இந்திய அணியில் பங்கேற்கும் வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.   இதற்கான பயிற்சி முகாம் மும்பையில் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சில் பங்கேற்க கேப்டன் சுனில் சேத்ரி உள்பட 30  வீரர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும்   இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளார். இந்த 30 பேரில் இருந்து ஆசியக்  கோப்பைக்காக விளையாட சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆசிய கோப்பைக்கான கால்பந்து போட்டியில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து, சசீனா,  தைபே  நாட்டை சேர்ந்த  அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் நியூசிலாந்து, தைபே அணிகள்  பலமாக இருக்கிறது.

இதனால் இவர்களை கவனமாக எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.
இது குறித்து  பயிற்சியாளர் ஸ்டீபன் கூறியதாவது :இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டிகளில்  விளையாட  நமது  வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாகும்.   இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள்  வலிமையான அணிகளை எதிர்கொள்ள  இருக்கிறார்கள்.

ஆசியக் கோப்பை போட்டிகளுக்கு முன்பாக நமது அணிக்கு பல்வேறு வெளிநாட்டு அணிகளுடன் மோதும் வாய்ப்பு கிடைக்க இருக்கிறது என்றார்.

.

மூலக்கதை