அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் டோனி

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிக சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் டோனி

மும்பை: ஐபிஎல் தொடரில் கடந்த இரண்டு ஆண்டுகள்  விளையாடாமல்  இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது.   ெகால்கத்தா அணியிடம் நேற்று தோற்றதினால் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால்  இந்த சீசனில் அதிக சிக்சர்கள் அடித்துள்ள அணிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

ெசன்னை அணி இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களில் 93 சிக்சர்களை பறக்க விட்டுள்ளது.   கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 78, டெல்லி டேர்டெவில்ஸ் - 75, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்-74 சிக்சர்களை சிதற விட்டுள்ளன. பஞ்சாப் - 50, மும்பை -48, ராஜஸ்தான் - 44, ஐதராபாத் - 28 சிக்சர்களை அடித்துள்ளன.

டோனி  இதுவரை நடந்துள்ள 9 ஆட்டங்களில் 24 சிக்சர்களை அடித்து அதிக சிக்சர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில்   முதல் இடத்தில் உள்ளார்.

பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெயில், பெங்களூர் வீரர் டிவில்லியர்ஸ், கொல்கத்தா வீரர் ஆந்ரே ரஸல் ஆகியோர் தலா 23 சிக்சர்களை அடித்து அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அவர்களை தொடர்ந்து டெல்லி அணியின் ரிஷப் பண்ட், சென்னை அணியின் அம்பாதி ராயுடு  ஆகியோரும் தலா 20 சிக்சர்களை அடித்துள்ளனர்.

அதிக ரன்கள் சென்னை முதலிடம்
அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில்  சென்னை அணியின் அம்பதி ராயுடு 391 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

சென்னை அணியின்   டோனி   329 ரன்களுடன் நான்காவது இடத்திலும், ஷேன் வாட்சன் 317 ரன்களுடன் 6வது இடத்திலும் உள்ளனர்.

ரிஷப் பண்ட்(டெல்லி) 375 ரன்களுடன் 2வது இடத்திலும் விராத்கோலி(பெங்களூர்) 349 ரன்களுடன் 3வது இடத்திலும், வில்லியம்சன்(ஐதராபாத்)-322 ரன்களுடன் 5வது இடத்திலும் இருக்கின்றனர்.

.

மூலக்கதை