உலகக்கோப்பையை கைப்பற்ற தயாராகும் ஆஸ்திரேலிய அணி: புதிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உலகக்கோப்பையை கைப்பற்ற தயாராகும் ஆஸ்திரேலிய அணி: புதிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்

மெல்போர்ன் : பந்து சேதப்படுத்தப்பட்ட  விவகாரத்தில் உலக அளவில் அசிங்கப்பட்டு  நிற்கிறது  ஆஸ்திரேலியா அணி. இந்த  அணியின்   முன்னாள் கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர்  மீது கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப் பட்டுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் பறிபோனது.   இந்த முறைகேடுக்கும் ஆஸ்திரேலியாவின் தலைமை பயிற்சியாளர் டேரன் லெமேனுக்கு தொடர்பு இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. ஆனாலும்   இந்த  சம்பவத்துக்கு பொறுப்பேற்று லெமேன் தனது தலைமைப்  பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்தச்சம்பவங்களினால் ஆஸ்திரேலியா கடும் சங்கடத்திற்கும், கண்டனத்திற்கும்  உள்ளானது.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் புதிய பயிற்சியாளரை ேதர்வு செய்யும் பணியில் தீவிரமாக இருந்தது.

இப்போது ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் 47வயது  ஜஸ்டின் லாங்கரை  நியமித்துள்ளது.   ஆஸ்திரேலிய அணிக்காக ஜஸ்டின் 105 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ளார். ஜஸ்டின் லாங்கர் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா, பெர்த் ஸ்கோட்சர்ஸ் அணிகளுக்குப் பயிற்சியாளராக இருந்துள்ளார்.
  இம்மாதம் 22 -ம் தேதி, ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளராகப் பதவியேற்கிறார்.

அடுத்த 4 அண்டுகளுக்குப் பயிற்சியாளராகச் செயல்படுவார். இந்த4 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா  இரண்டு ஆஷஸ் தொடர், உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பை போட்டிகளில்  விளையாட உள்ளது.

மிக முக்கிய காலகட்டத்தில் பயிற்சியாளராகப் பதவியேற்றுள்ளார் லாங்கருக்கு சவால்கள் காத்திருக்கின்றன.  

தேர்வுக்கு பிறகு ஊடகங்களிடம்  பேசிய  லாங்கர், ‘‘ ஆஸ்திரேலியாஅணிக்கு பயிற்சியாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்டது சவாலான வேலை.

மற்ற  அணிகள் ஆஸ்திரேலிய அணியை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். நமது  அணியில்  திறமையானவர்களுக்குப் பஞ்சமில்லை.

எல்லோரும் ஒன்றிணைந்து, மக்களின் ஆதரவுடன் ஆஸ்திரேலியாவைப் பெருமைபடச் செய்வோம். தற்போது மிக கடுமையாக பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

உலகக்கோப்பை, டி20 உலகக்கோப்பையை கைப்பற்றி மீண்டும் வெற்றிகளை குவிக்க காத்திருக்கோம்’’  எனக் கூறியுள்ளார்.


.

மூலக்கதை