டெல்லி அசத்தல் வெற்றி: ராஜஸ்தானின் பட்லர், ஷார்ட் அதிரடி வீண்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி அசத்தல் வெற்றி: ராஜஸ்தானின் பட்லர், ஷார்ட் அதிரடி வீண்

டெல்லி: டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடைப்பெற்ற ஐபிஎல் போட்டியின் 32வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக போட்டி  தாமதமாக தொடங்கியது.

அதனால் மொத்த ஓவர்களின் எண்ணிக்கை 20லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரராக  களமிறங்கிய காலின் முன்ரோ முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

ஆனால் அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா இணை அதிரடியாக விளையாடியது.

இந்த இணை 2வது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தது. பிரித்வி ஷா 25 பந்தில் 47 ரன்கள் குவித்து வெளியேறினார்.

அடுத்து ஸ்ரேயாஸ், ரிஷப் பாண்ட் ஜோடி அதிரடி காட்டி 3வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் குவித்தன. பின்னர் ஸ்ரேயாஸ்  35 பந்துகளில் 50 ரன்களும், ரிஷப் 29 பந்துகளில்69 ரன்னும், விஜய் சங்கர் 6 பந்துகளில் 17 ரன்களும் எடுத்து வெளியேறினர்.   கடைசி ஓவரின் முதல் பந்தில் மேக்ஸ்வெல் 5 பந்துகளில் 5 ரன்களில் அவுட்டானார்.

அதற்குள் மீண்டும் மழை ஆரம்பிக்க ஆட்டம் நிறுத்தப்பட்டது.

அப்போது பிளங்கெட் 2 பந்தில் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தார்.

ராஜஸ்தான் அணியின் ஜெய்தேவ் உனத்கட் 3 விக்கெட்களும்,  குல்கர்னி, கோபால், ஆர்ச்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.   டெல்லி அணி 17. 1 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்திருந்தது. மழை நின்ற போது  டக்வொர்த் லீவிஸ் முறையில் 12 ஓவரில் 150 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் அணிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இமாலய இலக்கை ேநாக்கி ராஜஸ்தான் களமிறங்கியது.   ஆனால் ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜோஸ் பட்லர், ஆர்சி ஷார்ட் முதல்  டெல்லி அணியின் பந்துகளை நொறுக்க ஆரம்பித்தனர். இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டுக்கு 6. 4 ஓவரில்  82 ரன்கள் குவித்தனர்.   பட்லர் 26 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

அடுத்து ஷார்ட் 25 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.

அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 5 பந்துகளில் 3 ரன்கள், பென் ஸ்டோக் 2 பந்துகளில் 1 ரன்,  ராகுல் திரிபாதி 8 பந்துகளில் 9 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து வெளியேற ராஜஸ்தான் அணி வெற்றி கேள்விக்குறியானது.

ஆனாலும் கிருஷ்ணப்பா கவுதம் கடைசி நேரத்தில் அதிரடி காட்டினார். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முதல் பந்தில் 4 ரன்கள் எடுத்தார். கடைசிப்பந்தில் 6 ரன்கள் தேவைப்பட 2 ரன்கள் மட்டுமே சேர்க்க  டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.



கிருஷ்ணப்பா 6 பந்துகளில் 18 ரன்களுடனும், ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு பந்துக்கூட சந்திக்காமலும் களத்தில் இருந்தனர். ராஜஸ்தான் அணி 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது.

டெல்லி அணியின் டிரன்ட் போல்ட் 2 விக்கெட்களும்,  அமீத் மிஸ்ரா, மாக்ஸ்வெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில்  கடைசி இடத்தில் இருந்த  டெல்லி அணி 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

ராஜஸ்தான் அணி 7வது இடத்தில் உள்ளது.

.

மூலக்கதை