உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் புஷ் அனுமதி

தினகரன்  தினகரன்

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபரும், முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தந்தையுமான ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷின் மனைவி பார்பரா (73) கடந்த செவ்வாயன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவரது அடக்கம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.இந்நிலையில், மனைவியின் இறுதி சடங்குகள் நடைபெற்றதற்கு அடுத்த நாளே, ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ் உடல்நலக் குறைவால் ஹூஸ்டன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 93 வயதான அவருக்கு ரத்தத்தில் தொற்று ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருடைய உடல் சிகிச்சையை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை