கனடாவில் மக்கள் கூட்டத்தில் வேன் புகுந்ததில் 10 பேர் பலி: தீவிரவாத சம்பவமா என விசாரணை

தினகரன்  தினகரன்

டொரண்டோ: கனடாவில் பொதுமக்கள் கூட்டத்தில் வேன் ஒன்று புகுந்தது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். கனடாவின் மிகப்பெரிய நகரம் டொராண்டோவாகும். இந்த நகரில் நேற்று அதிகாலை வாடகை வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரத்தில் இருந்த பொதுமக்கள் கூட்டத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் பலியானார்கள். மேலும், 15 பேர் காயமடைந்தனர்.போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் சடலங்களும் மீட்கப்பட்டது. இதனிடையே விபத்து ஏற்படுத்திய அலேக் மினாசியான்(25) என்பவரை போலீசார் கைது  செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என போலீசார் தெரிவித்துள்ளனர். அலேக்குக்கும் தீவிரவாத அமைப்புக்கும் தொடர்பு உள்ளதா என தீவிர விசாரணை நடந்து வருகிறது. சமீபகாலமாக தீவிரவாதிகள் ஆயுதங்கள் எதுவும் இல்லாமல், கனரக வாகனங்களை மக்கள் கூட்டத்தில் செலுத்தி பெருமளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. கனடாவில் ஜி7 அமைச்சர்கள் சந்திப்பு நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மூலக்கதை