ராஜ்யசபா அலுவலகம் தபால் நிலையம் அல்ல: வெங்கையா நாயுடு

தினமலர்  தினமலர்
ராஜ்யசபா அலுவலகம் தபால் நிலையம் அல்ல: வெங்கையா நாயுடு

புதுடில்லி : ''அரசியல் சாசன விதிமுறைகளை ஆராய்ந்து பார்த்த பின், தலைமை நீதிபதிக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை தள்ளுபடி செய்தேன். ஆராயாமல் முடிவு எடுக்க, ராஜ்யசபா தலைவர் அலுவலகம், தபால் நிலையம் அல்ல,'' என, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான, வெங்கையா நாயுடு கூறினார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்க, ராஜ்யசபாவில் கண்டன தீர்மானம் நிறைவேற்றக் கோரி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான, வெங்கையா நாயுடுவிடம், 'நோட்டீஸ்' கொடுத்திருந்தன. அந்த நோட்டீஸ் நிராகரிக்கப்படுவதாக, வெங்கையா நாயுடு நேற்று முன்தினம் அறிவித்தார்.

இது பற்றி, வெங்கையா நாயுடு, நிருபர்களிடம் கூறியதாவது: தலைமை நீதிபதி மீது, கண்டன தீர்மானம் தாக்கல் செய்வதற்கான காரணங்கள் பற்றி, சட்ட வல்லுனர்கள் மற்றும் அரசியலமைப்பு நிபுணர்களுடன் ஆலோசித்த பிறகே, எதிர்க்கட்சிகளின் நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் கொடுக்கும் மனுவை ஆராயாமல், சபையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு, ராஜ்யசபா தலைவர் அலுவலகம், தபால் நிலையம் அல்ல. சட்ட விதிமுறையை ஆராய்ந்து தான் முடிவு எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை