குருவாயூர் கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே அன்னதானம்

தினகரன்  தினகரன்

திருவனந்தபுரம் : குருவாயூர் கோயிலில் இந்துக்கள் அல்லாதோருக்கு அன்னதானம் வழங்குவதற்கு கோயில் தந்திரி எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து  அத்திட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆண்கள் பேன்ட், சட்டை அணிந்து கோயிலுக்குள் செல்லக்கூடாது. வேட்டி கட்டிதான் செல்ல வேண்டும். அதுபோல் பெண்கள் சேலை அணிந்துதான் தரிசனத்துக்கு செல்ல வேண்டும். இந்துக்கள் அல்லாதோருக்கு கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. இக்கோயிலில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கோயிலில் உள்ள ஒரு அரங்கத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. அன்னதானத்திற்கு செல்லும் பக்தர்களுக்கும் கோயிலுக்குள் செல்லும் அதே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் சமீபத்தில் கோயிலுக்கு வெளியே அன்னதான மண்டபம் மாற்றப்பட்டது. இதையடுத்து இந்துக்கள் அல்லாதோருக்கும் அன்னதானம் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி கடந்த சில தினங்களாக பிற மதத்தினரும் குருவாயூர் கோயிலில் நடந்த அன்னதானத்தில் பங்கேற்றனர். இந்நிலையில் இதற்கு கோயில் தந்திரி நாராயணன் நம்பூதிரி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.  இது குறித்து அவர் கூறியதாவது: கோயிலுக்கு வரும்போது பக்தர்கள் கடைபிடிக்கும் அதே நடைமுறையைதான் அன்னதானத்தின் ேபாதும் கடைபிடிக்க வேண்டும்.  அன்னதான மண்டபம் கோயிலுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ளதால் இதுவரை கடைபிடிக்கப்பட்ட விதிமுறைகளை மாற்றக்கூடாது. அன்னதான மண்டபத்திற்கு செல்லும் பக்தர்கள் ேபன்ட், சட்டை, செருப்பு அணியாமல் தான் செல்ல வேண்டும். இதைபோல இந்து மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதையடுத்து இன்று முதல் குருவாயூர் கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே அன்னதானம் வழங்கப்படும் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை