இந்தியா வழியாக சோதனை ஓட்டம் வங்கதேசம் - நேபாளத்திற்கு இடையே பேருந்து சேவை

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: இந்தியா வழியாக வங்கதேசத்திலிருந்து நேபாளத்திற்கு இயக்கப்பட உள்ள பேருந்தின் சோதனை ஓட்டம் தொடங்கியது.வங்கதேசம், பூடான், இந்தியா மற்றும் நேபாளம் இடையில் வாகனங்கள் இயக்க கடந்த 2015 ஜூன் மாதத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களை இயக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் வங்கதேச தலைநகர் தாகா மற்றும் நேபாள தலைநகர் காத்மாண்டு இடையே பேருந்து இயக்க வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் செல்லும் பேருந்து இந்தியாவின் சிலிகுரி வழியாக செல்லும் என்று வங்கதேச சாலை போக்குவரத்து கழக தலைவர் பரிதுதின் அகமது தெரிவித்துள்ளார். இதன் மொத்த தொலைவு 1,200 கி.மீ. என்று தெரிவித்த அவர், இந்த பேருந்து சேவை மூலம் மூன்று நாடுகளின் உறவு மேலும் வலுப்படும் என்றும் தெரிவித்தார். தற்பொழுது வங்க தேசத்திலிருந்து நேபாள தலைநகர் காத்மாண்டுவிற்கு பயணிகள், லால்மோனிஹாத் - புரிமாரி - சன்கிரபந்தா - சிலிகுரி வழியாக செல்கின்றனர். இந்த புதிய வழித்தடத்தின்மூலம் 100 கிலோ மீட்டருக்கும் மேல் பயணதூரம் குறைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வங்கதேசம், நேபாளம் மற்றும் இந்தியா இடையிலான ேபருந்து சேவைக்கான சோதனை ஓட்டம் ேநற்று முன்தினம் தொடங்கியது.

மூலக்கதை