மரண தண்டனைக்கு தூக்குதான் சரியானது : உச்சநீதிமன்றத்தில் அரசு அறிக்கை

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: தூக்கிட்டு மரண தண்டனையை நிறைவேற்றும் தற்போதைய முறைக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. மரண தண்டனையை நிறைவேற்ற மத்திய அரசு தற்போதுள்ள தூக்கிட்டு தண்டனையை நிறைவேற்றும் முறையை மாற்றி விஷ ஊசி போட்டு கொலை செய்தல், துப்பாக்கியால் சுடுதல், விஷவாயு நிரப்பப்பட்ட அறையில் அடைத்து மூச்சு திணறடித்து கொலை செய்வது போன்ற வலியில்லாத பிற முறைகளை பரிசீலிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ரிஷி மல்கோத்ரா என்பவர் பொதுநல மனு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக பதில் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன் உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: விஷஊசி போட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவது சில நேரங்களில் தவறான முறையில் பயன்படுத்த வாய்ப்புள்ளது.  மேலும் மரண தண்டனையை நிறைவேற்றும்போது குறைந்த அளவு வலியே இருக்க வேண்டும் என்று ஐநா கடந்த 1984ல் பரிந்துரை செய்துள்ளது. எனவே மத்திய அரசு தூக்கிடுதல் முறையில் மரண தண்டனையை நிறைவேற்ற ஆதரவு தெரிவிக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை