வங்கதேசம் - இந்தியா பஸ் போக்குவரத்து

தினமலர்  தினமலர்
வங்கதேசம்  இந்தியா பஸ் போக்குவரத்து

கிஷன்கஞ்ச் : வங்கதேசம் - இந்தியா - நேபாளம் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையில், பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது.

இம்மாதம், 27ல், இந்தியா, வங்கதேசம் மற்றும் நேபாள நாடுகளுக்கிடையில், நட்புறவை வளர்க்கும் வகையில், முத்தரப்பு கூட்டம் நடக்க உள்ளது. 'வீடியோ கான்பரன்சிங்' மூலம் நடக்கும் இந்த கூட்டத்தில், பஸ் போக்குவரத்துக்கான பாஸ்போர்ட் மற்றும், 'விசா' நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

இதன் முன்னோட்டமாக, வங்கதேச தலைநகர் தாகாவில் இருந்து, இந்தியா வழியாக நேபாளத்துக்கு, நேற்று முன் தினம் பஸ் போக்குவரத்து துவங்கப்பட்டது. தாகாவில் இருந்து, 45 பயணியருடன் புறப்பட்ட பஸ், இந்தியாவின், மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி வழியாக, இன்று நேபாளத்தை சென்றடையும். வங்கதேசத்தின், ரங்பூரிலும், இந்தியாவில், மேற்கு வங்க மாநிலம், சிலிகுரியிலும், இரவு நேரத்தில் பயணியர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை