கர்நாடக தேர்தல்: மே 1 முதல் பிரதமர் மோடி பிரசாரம்

தினமலர்  தினமலர்
கர்நாடக தேர்தல்: மே 1 முதல் பிரதமர் மோடி பிரசாரம்

புதுடில்லி: கர்நாடகா சட்டசபை தேர்தலில் வரும் மே 1-ம் தேதி முதல் தனது பிரசாரத்தை பிரதமர் மோடி துவக்குகிறார்.

கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் 12-ம் தேதி நடைபெறுகிறது. ஆளும் காங்., பா.ஜ. இடையே கடும் போட்டி நிலவுகிறது. கருத்து கணிப்பு முடிவுகள் வெவ்றோக வந்தாலும், தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கார்நாடகா மாநிலத்தில் தனது தேர்தல் பிரசாரத்தினை மே 1-ம் தேதி முதல் பிரதமர் மோடி துவக்குகிறார். மாநிலத்தின் 20 இடங்களில் பா.ஜ. . வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தினை செய்ய திட்டமிட்டுள்ளதாக பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

மூலக்கதை