ஆபாச இணையதளங்கள் தடை செய்ய கோரிக்கை

தினமலர்  தினமலர்
ஆபாச இணையதளங்கள் தடை செய்ய கோரிக்கை

புதுடில்லி : ஆபாச இணைய தளங்களை தடை செய்யக்கோரி, மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர், பூபேந்திர சிங், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர், பூபேந்திர சிங், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: காஷ்மீர், ம.பி., - உ.பி., உட்பட பல இடங்களில், சிறுமியர் பலாத்காரம் செய்யப்படுவது அதிரித்துள்ளது. ஆபாச இணைய தளங்கள் ஏராளமாக புழக்கத்தில் இருப்பது, இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. எனவே, ஆபாச இணையதளங்கள், மற்றும் சினிமாக்களை தடை செய்ய, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.

மூலக்கதை