பெல்ஜியம் துப்பாக்கிச்சூடு தீவிரவாதிகளுக்கு 20 ஆண்டு சிறை

தினகரன்  தினகரன்

பிரெஸ்ஸல்ஸ்: பெல்ஜியத்தில் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய 2 ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு 20 ஆண்டு சிறை தண்டணை விதிக்கப்பட்டது. பாரிசில் 2015ம் ஆண்டு நடந்த ஐஎஸ் தீவிரவாத தாக்குதலில் 130 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலை நடத்தியவர்கள் பெல்ஜியத்தில் பிறந்து பிரான்ஸ் குடியுரிமை பெற்ற சலாக் அப்தேஸ்லாம் (28), சோபியான் அயாரி (24) என்று போலீசார் சந்தேகப்பட்டனர். பாரிசில் தாக்குதல் நடத்திவிட்டு அவர்கள் பெல்ஜியத்திற்கு தப்பி சென்று விட்டனர். போலீசார் கொடுத்த தகவல் அடிப்படையில் 2016 மார்ச் 15ல் பிரெஸ்ஸல்ஸ் வனப்பகுதியில் உள்ள குடியிருப்பை சுற்றி வளைத்தனர். அப்போது  2 பேரும் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 அதிகாரிகள் காயம் அடைந்தாலும் சலாக் மற்றும் சோபியானை கைது செய்தனர். இதன் தொடர்ச்சியாக மார்ச் 22ல் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் பெல்ஜியத்தில் 32 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலை திட்டமிட்டதும் இவர்கள்தான் என்ற சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பான விசாரணை பெல்ஜியம் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சலாக் அப்தேஸ்லாம், சோபியான் அயாரி ஆகிய 2 பேருக்கும் தலா 20 ஆண்டு சிறை தண்டணை விதிக்கப்பட்டது.

மூலக்கதை