மக்களின் எதிர்ப்பால் ஆர்மீனியா பிரதமர் பதவி விலகினார்

தினகரன்  தினகரன்

யெரேவன்: பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, ஆர்மீனியா பிரதமர் செர்ஷ் சர்கிசியான் பதவி விலகினார். முன்னாள் ராணுவ அதிகாரியான செர்ஷ் சர்கிசியான், கடந்த 2008ம் ஆண்டு முதல் ஆர்மீனியாவின் அதிபராக இரண்டு முறை தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த 9ம் தேதியுடன் முடிந்தது. ஆனால் சட்டத்தை திருத்தம் செய்ததன் மூலம் அதிபருக்கான அதிகாரங்கள் பிரதமருக்கு மாற்றப்பட்டன. 17ம் தேதி ஆர்மீனியா பிரதமராக சர்கிசியானை எம்பிக்கள் தேர்ந்தெடுத்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து சர்கிசியான் பதவி விலகினார்.

மூலக்கதை