இந்தியர்கள் சீன மொழி கற்றுக்கொள்ள வேண்டும் : அமைச்சர் சுஷ்மா பேச்சு

தினகரன்  தினகரன்

பீஜிங்: ‘‘இந்தியர்களும், சீனர்களும் ஒருவர் மொழியை மற்றவர் கற்றுக்கொள்வது அவசியம்’’ என்று வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார். சீனாவில் ஷங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சீனாவில் நடைபெறும் வெளியுறவு துறை அமைச்சர்கள் மாநாட்டில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்து கொள்கிறார். இந்நிலையில், பீஜிங்கில் நடைபெற்ற “இந்தி பங்களிப்பு - சீனாவின் நட்பு” என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சியில் சுஷ்மா பங்கேற்றார். நிகழ்ச்சியில் அமைச்சர் சுஷ்மா கூறியதாவது: இரண்டு நண்பர்கள் அருகருகே அமரும்போது மனம் விட்டு பேச வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள். அதற்காக மொழி தெரிந்திருப்பது தேவை. அவர்கள் இருவருக்கும் இடையே மொழிபெயர்ப்பாளர் இருந்தால் வார்த்தைகளை மட்டும்தான் மொழி பெயர்க்க முடியும். ஆனால், அவர்களின் உணர்வுகளை தெரிவிக்க இயலாது. எனவே, மொழியை கற்பது அவசியம். அதனை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா - சீனா இடையே உறவு வலுவடைந்து வருவதால், வர்த்தகம் அதிகரித்து வருகிறது. சர்வதேச அரங்கில் இருவரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம்.  இந்தியா மற்றும் சீனாவின் உறவு வலுவடைந்து வருவதால், வர்த்தகம் அதிகரித்து வருகிறது, நாங்கள் சர்வதேச அரங்கில் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோம், நீங்கள் இந்தி மொழியை கற்றுக் கொள்வது மிகவும் முக்கியம் வாய்ந்தது, நாங்கள் சீன மொழியை கற்றுக் கொள்கிறோம். இந்தியர்கள் சீனாவு–்க்கு வரும்போது அவர்கள் சிரமத்தை எதிர் கொள்ளமாட்டார்கள். இதேபோல் சீனர்கள் இந்தியா வரும்போது அவர்களுக்கு மொழி பெயர்ப்பாளர் தேவையில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை