புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம்

தினமலர்  தினமலர்
புதியவர்களின் சந்தோஷத்தில் கலவரம்

புதியவர்களின் கூட்டணியில் சந்தோஷத்தில் கலவரம் என்கிற படம் உருவாகி வருகிறது. ஸ்ரீ குரு சினிமாஸ் சார்பில் திம்மா ரெட்டி தயாரிக்கிறார் . கிராந்தி பிரசாத் இயக்குகிறார். இவர் பல விளம்பரப்படங்கள் , குறும்படங்களை இயக்கியவர். நிரந்த் ,ருத்ரா அவ்ரா , ஆர்யன் , ஜெய் ஜெகநாத் , ராகுல் சி .கல்யாண் , கெளதமி , செளஜன்யா , ஷிவானி ,அபேக்ஷா என இப்படத்தில் புதுமுகங்கள் பலரும், ரவி மரியா வித்தியாசமான கேரக்டரிலும் நடிக்கிறார்கள். படத்துக்கு ஒளிப்பதிவு பவுலியஸ். இசை சிவநக்.

"ஒரு மகிழ்ச்சியான தருணத்தில் கலவரம் நடந்தால் அதன் விளைவு எப்படி இருக்கும்? என்பதே கதை. அதனால்தான் தீமைக்கும் நன்மைக்கும் இடையில் நடக்கும் மோதல் என்று டைட்டிலுடன் டேக் லைன் போட்டுள்ளோம் இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்றாலும் இதில் நட்பு ,காதல் , அன்பு , காமெடி , ஆன்மிகம் எல்லாம் கலந்துள்ளன. உன்னையே நீ அறிவாய் உனக்குள் இருக்கும் இறைவன் உணர்வாய் , உன் உயரம் அறிவாய் என உரக்கச் சொல்கிறது படம் " என்கிறார் இயக்குநர் கிராந்தி பிரசாத் .

மூலக்கதை